NATIONAL

 227,000 ஊழியர் சேமநிதி வாரியப் பங்களிப்பாளர்கள் 55 வயதுக்குப்பின் போதுமான சேமிப்பைக் கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், மார்ச் 29: கடந்த பிப்ரவரி மாதம் வரை 227,000 ஊழியர் சேமநிதி வாரியப் பங்களிப்பாளர்கள் (EPF), 55 வயதை அடையும் போது தங்களின் கணக்கு 1 இல் குறைந்த பட்சம் RM240,000 அடிப்படை சேமிப்பைக் கொண்டுள்ளனர் என நாடளுமன்றம் தெரிவித்தது.  .

அதில் 50 முதல் 54 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையில் 41 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதாவது மொத்தம் 551,000 பங்களிப்பாளர்கள் உள்ளனர் என நிதியமைச்சர் II செனட்டர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் கூறினார்.

கூடுதலாக, மொத்தம் 604,000 உறுப்பினர்கள் தங்களுடைய சேமிப்பை அதிகரிக்க தன்னார்வப் பங்களிப்புகளைச் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மொத்த பங்களிப்பு சுமார் RM8.42 பில்லியன் என்றும் அவர் தெரிவித்தார்.

“தங்களின் பங்களிப்புகளை அதிகரிக்க உறுப்பினர்கள் முதலாளிகளுக்கு நல்முறையில் ஒத்துழைப்பை வழங்கலாம். ஏனெனில் இது ஊழியர்களுக்குப் பங்களிப்புகளை அதிகரிக்க உதவுவதன் மூலம் நிறுவனத்தின் ஈர்ப்பு தன்மையாகவும் மாறுகிறது,” என்று அவர் நாடளுமன்றத்தின் கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

இந்த ஆண்டு 50 வயதுக்கு மேற்பட்ட EPF பங்களிப்பாளர்கள் போதுமான சேமிப்பைக் கொண்டுள்ளனரா என்பது தொடர்பான செனட்டர் முகமட் ஹஸ்பியின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

– பெர்னாமா


Pengarang :