Timbalan Setiausaha Kerajaan (Pengurusan), Dato’ Zamani Ahmad Mansor bergambar bersama penerima selepas penyampaian sumbangan Back To School anjuran Kelab Kebajikan Pembantu Operasi Pejabat SUK ketika program “Kembali ke Sekolah Tahun 2020” di Dewan Jubli Perak, Shah Alam pada 27 Disember 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ECONOMYNATIONALPENDIDIKAN

கிள்ளானில் மூன்று புதிய பள்ளிகளின் நிர்மாணிப்புக்கு அங்கீகாரம்

ஷா ஆலம், மார்ச் 30 – கிள்ளான் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்று புதிய  பள்ளிகளின் நிர்மாணிப்பு  மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மூன்று பள்ளித் திட்டங்களும் செயலாக்கத்திற்கு முந்தைய கட்டத்தில் இருப்பதாகவும் அவை  கட்டுமானப் பணிக்காக  பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.

2024 ஆம் ஆண்டிற்கான 12வது மலேசியத் திட்டத்தின்  சுழல் திட்டம் நான்கின் கீழ்,ஃ குறிப்பாக கிள்ளான் தொகுதியில் புதிய பள்ளிகள் மற்றும் கூடுதல் கட்டிடங்களை நிர்மாணிப்பது உட்பட மொத்தம் மூன்று புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில்  கிள்ளான், பூலாவ் இண்டா தேசியப் பள்ளியை  12 வகுப்பறைகள், ஒரு திறந்தவெளி மண்டபம் மற்றும் பிற வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டுவது அடங்கும்.

36 வகுப்பறைகள் மற்றும் இதர வசதிகளை உள்ளடக்கிய புக்கிட் ராஜா புதிய தேசியப்  பள்ளியின் கட்டுமானம் மற்றும் 10 பயிற்சி அறைகள், சிறப்பு அறைகள் மற்றும் பிற வசதிகளை உள்ளடக்கிய ஸ்ரீ இஸ்தானா ஆறாம் படிவ கல்லூரித் திட்டமும் இதில் உள்ளடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான் மாவட்டத்தில் அதிக பள்ளிகளை நிர்மாணக்கும கல்வியமைச்சின்  திட்டம் குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் எழுப்பிய கேள்விக்கு மார்ச் 27 தேதியிட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அவர் கூறினார்


Pengarang :