SELANGOR

இல்திசம் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (இம்பாக்) திட்டம் பாராட்டுக்குரியது

ஷா ஆலம், ஏப் 4: இல்திசம் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (இம்பாக்) திட்டத்தை உருவாக்கிய மாநில அரசின் முயற்சியை பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் பாராட்டினார்.

இந்தத் திட்டமானது, பராமரிப்பு பயிற்சியில் பல அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம், வீட்டு குழந்தை பராமரிப்பாளர்களின் கௌரவத்தை உயர்த்த உதவும் என்று டேனியல் அல் ரஷீட் ஹரோன் கூறினார்.

“வீட்டில் உள்ள குழந்தை பராமரிப்பாளர்கள், அனுபவசாலிகள், ஆனால் பாதுகாப்பு அம்சத்தில் அவர்களுக்குத் தெளிவு இல்லாமல் இருக்கலாம்.

“எனவே, இந்த இம்பாக் திட்டத்தின் மூலம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருக்க பராமரிப்பவர்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ-சிட்டியில் உள்ள பெஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டலில் சுமார் 100 பராமரிப்பாளர்களுடன் நோன்பு திறக்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

இவ்விழாவில் (யாவாஸ்) யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் பொது மேலாளர் கான் பெய் நெய் கலந்து கொண்டார். இத்திட்டத்தில் 1,000 பராமரிப்பாளர்கள் வீட்டில் இருந்தவாறு பங்கேற்பதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார்.


Pengarang :