SELANGOR

ஐடில்பித்ரி உணவு கூடைகள் வழங்க RM45,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஏப் 4: பண்டான் இண்டா தொகுதியின் சமூக சேவை மையம் ஐடில்பித்ரி உணவு கூடைகள் வழங்க RM45,000 ஒதுக்கீடு செய்தது.

ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் 750 நபர்களுக்கு மட்டுமே வழங்கியதால் இந்த உணவு நன்கொடை ஏற்பாடு செய்யப்பட்டது என சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

“இந்த சிறப்பு திட்டத்திற்கு நாங்கள் RM45,000 ஒதுக்கீடு செய்துள்ளோம். மேலும் பெறுநர்களின் எண்ணிக்கையை இறுதி செய்யவில்லை. தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனடியாக அங்கீகரிக்கப் படுவார்கள் மற்றும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படும்.

“இதுவரை, நாங்கள் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம், வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படுவார்கள்,” என்று சிலாங்கூர்கினியை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம், ஐடில்பித்ரி கொண்டாட்டத்திற்கு முன்னதாக அதிக குடியிருப்பாளர்கள், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு உதவ முடியும் என்று அவர் கூறினார்.


Pengarang :