SELANGOR

ராயா உணவு தயாரிக்கும் கோத்தோங்-ரோயோங் திட்டம் மீண்டும் ஏற்பாடு

ஷா ஆலம், ஏப் 15: இந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ராயா உணவு தயாரிக்கும் கோத்தோங்-ரோயோங் திட்டம் மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கான ரேவாங் ஐடில்பித்ரி எனப்படும் இத்திட்டம் செலாயாங்கில் நடைபெறும் என வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

“குடியிருப்பாளர்களும் உள்ளூர் சமூகமும் சேர்ந்து லெமாங், கெத்துபாட் மற்றும் ரெண்டாங் உள்ளிட்ட ராயா உணவுகளை சமைப்பார்கள்.

“இத்திட்டமானது காலையில் தொடங்கும், மாலையில் விருந்து நடைபெறும். அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்றும், நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்” என போர்ஹான் அமன் ஷா கூறினார்.

கடந்த ஆண்டு, அம்பாங் மற்றும் உலு லங்காட் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகத்தைப் பற்றிய தகவல்களைக் குடியிருப்பாளர்கள் எளிதாகப் பெறுவதற்கு ஜோம் ரேவாங் செகாம்போங் ஐடில்பித்ரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரம்ஜானுக்கு முன், அம்பாங்கில் உள்ள தாமான் பண்டான் ஜெயாவில் இரண்டு நாட்களுக்கு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் செலாவட், மர்ஹாபன், நாட்டுப்புற விளையாட்டுகள், ஃபுட்சல், கயிறு இழுத்தல் மற்றும் பார்வையாளர்களுக்கு அதிர்ஷ்டக் குலுக்கல் போன்ற பல சுவாரஸ்யமான நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.


Pengarang :