ANTARABANGSA

1.7 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்

ஜெனீவா, ஏப் 17: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளின் விளைவாக சுமார் 1.7 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வலுக் கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர். இத்தாக்குதல்களில் 33,000 பேர் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது. அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். மற்றும் பெண்கள் ஆவர்.

“காசாவில் பொதுமக்கள் அனுபவிக்கும் நிலைமையைச் சரி செய்வது முன்னுரிமையாக இருக்க வேண்டும்” என ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்டாசனி கூறினார்.

காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கும் மற்றும் வழங்குவதற்கும் இஸ்ரேல் சட்டவிரோதமான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருவதாகவும், காசா பகுதியின் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காசாவில் சுமார் 1.7 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் பயத்திலும் அச்சுறுத்தலிலும் வாழ்கிறார் என ஷாம்டாசனி கூறினார்:

மேற்குக் கரையில் பொது ஒழுங்கையும் பாதுகாப்பையும் மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

– பெர்னாமா-வாஃபா


Pengarang :