SELANGOR

டெலிகிராம் செயலியில் கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினரின் அடையாளத்தை ஏந்திய போலி  கணக்கு-  ஏமாற வேண்டாம் 

ஷா ஆலம், ஏப்.19: டெலிகிராம் செயலியில் கோத்தா அங்கேரிக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள முதலீட்டுக் கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்.

அறிமுகமான ஒருவர் மூலம் இந்த கணக்கு இருப்பதை அறிந்தேன் என முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.

“எனது புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி மறைமுகமாக டெலிகிராம் பயன்பாட்டில் உள்ள முதலீட்டுக் கணக்கு பற்றி முன்பு தெரிவித்தேன். தற்போது இந்தக் கணக்கு குறித்து எனக்கு மீண்டும் தெரிவிக்கப்பட்டது..

“குறிப்பாக என்னை அறிந்த கோத்தா அங்கேரிக் மற்றும் ஷா ஆலம் மக்கள், இந்த டெலிகிராம் கணக்கால் ஏமாற்றப்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன்,” என அவர் X விண்ணப்பத்தின் மூலம் கூறினார்.


Pengarang :