NATIONAL

நைட்ரோஜன் வாயுகலன் வெடித்த சம்பவத்தில் மூன்று தொழிலாளர்கள் காயம்

ஷா ஆலம், ஏப் 22: இன்று கோத்தா கெமுனிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரோஜன் வாயு கலன் வெடித்த சம்பவத்தில் மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர். அதில் ஒருவர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து தனக்கு காலை 10.14 மணிக்கு அழைப்பு கிடைத்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) செயல்பாடுகள் மற்றும் தீயணைப்புப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

அதைத் தொடர்ந்து, ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் (பிபிபி) மொத்தம் 12 உறுப்பினர்கள் மூன்று இயந்திரங்களுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“தொழிற்சாலை ஊழியர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது நைட்ரோஜன் வாயு கலன் வெடித்ததன் விளைவாக இச் சம்பவம் நிகழ்ந்தது.

இரசாயனங்கள் சம்பந்தப்பட்ட எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்த அபாயகரமான இரசாயன சிறப்புக் குழு (ஹஸ்மட்) சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், இச்சம்பவம் தொழிற்சாலை கட்டிடத்தின் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை விசாரணையில் கண்டறிந்ததாகவும் அஹ்மட் முக்லிஸ் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :