SELANGOR

குடிநீர் குழாய் மாற்றுத் திட்ட ஒப்பந்ததாரர்கள், பொதுப்பணித்துறை நிர்ணயித்த தரத்தின்படி பணியை மேற்கொள்ள வேண்டும்

ஷா ஆலம், ஏப்.22: டூசுன் துவா தொகுதியில் குடிநீர் குழாய் மாற்றுத் திட்டத்தை கொண்டுள்ள ஒப்பந்ததாரர்கள், பொதுப்பணித்துறை (ஜே.கே.ஆர்.) நிர்ணயித்த தரத்தின்படி பணியை மேற்கொள்ள நினைவூட்ட படுகிறார்கள்.

பல எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும், சாலை பாதுகாப்பு அம்சங்களைப் புறக்கணிக்கும் தரப்பினரால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் டத்தோ வீரா ஜோஹான் அப்துல் அஜிஸ் கூறினார்.

இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணத் தவறினால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என நேற்று முகநூலில் பதிவேற்றிய அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

“ஒப்பந்ததாரர்கள் அலட்சியப்படுத்திய தாகத் தெரிகிற தண்ணீர் குழாய் மாற்றுப் பணி விவகாரம் தொடர்பாக எத்தனை முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. கண்டிப்பாக இதுவே கடைசி முறையாக இருக்க  வேண்டும்.

“நானும் நாடாளுமன்ற உறுப்பினரும் (உலு லங்காட் முகமட் சானி ஹம்சான்) சாலை மேம்பாடு பணிகளைக் கண்காணிக்க ஒப்பந்தக்காரர் பொறுப்பை உறுதி செய்ய உடனடியாகச் செயல்படுவோம்.

சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு அம்சங்களை புறக்கணிக்கும் ஒப்பந்ததாரரின் அலட்சியப்போக்கு க்கு எதிராக நானே நடவடிக்கை எடுப்பேன்,” என்றார்.

கடந்த மார்ச் மாதம் இந்த விவகாரம் குறித்து சிலாங்கூர் மாநில சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், சாலை அமைக்கும் பணியின் போது ஜே.கே.ஆர் தர நிலைகளுக்கு இணங்காத குழாய் மாற்றும் விவகாரம் குறித்து ஏப்ரல் 12ம் தேதி அவர் வருத்தம் தெரிவித்தார்.


Pengarang :