SELANGOR

கோலா குபு பாரு  வரலாற்று சிறப்பு  காரணமாகக்  சிலாங்கூர் மாநில ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது

ஷா ஆலம், ஏப் 25: எதிர்வரும் ஏப்ரல் 27 அன்று சிலாங்கூர் மாநில ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பை நடந்த கோலா குபு பாரு தேர்ந்தெடுக்கப்பட்டது. தனித்துவம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டதன் காரணமாக இவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய பல்வேறு சுற்றுலாத் தளங்களையும் இப்பகுதி கொண்டுள்ளது என்று மாநில துணைச் செயலாளர் (நிர்வாகம்) டத்தோ முகமட் யாசிட் சாய்ரி  விளக்கினார்.

“அது தனித்துவமான நகரம் ஆகும். வரலாற்று மதிப்புகள் மற்றும் பல சுற்றுலா இடங்கள் ஆகியவற்றால் நிறைந்துள்ளது. மக்கள் சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிட இங்கு தங்கி பொழுதை கழிக்கலாம்,” என்று அவர் கூறினார்.

இன்று ரேடியோ டெலிவிஷன் மலேசியா (ஆர்டிஎம்) சேனலில் செலாமட் பாகி மலேசியா நிகழ்ச்சியில் போது அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், ரியூ ராயா கருப்பொருளான #கித்தா சிலாங்கூர் திறந்த இல்ல உபசரிப்பு இரவு 8 முதல் 11 மணி வரை நடைபெறும். இந்நிகழ்வுக்கு 25,000 பார்வையாளர்களை மாநில நிர்வாகம் இலக்காகக் கொண்டுள்ளது என்று முகமட் யாசிட் தெரிவித்தார்.

சிலாங்கூர் சுல்தான் அவர்களும் குழந்தைகளுக்கு டூயேட் ராயாவை வழங்கும் விழாவில் கலந்து கொள்வார் என முகமட் யாசிட் கூறினார்.

“மேலும் தகவலுக்குச் சிலாங்கூர் மாநில அரசு செயலாளரின் அலுவலக முகநூல் பக்கத்தைப் பார்வையிடவும்” என்று அவர் கூறினார்.


Pengarang :