MEDIA STATEMENTNATIONAL

கோல குபு பாருவில் ஒற்றுமை அரசின் ஆதரவாளர்களுடன் மந்திரி புசார் கலந்துரையாடினார்

உலு சிலாங்கூர், ஏப் 27- இன்று இங்கு நடைபெற்ற கோல குபு பாரு சட்டமன்றத் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிகழ்வுக்குப் பின்னர் சிலாங்கூர் மாநில ஹராப்பான் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஒற்றுமை அரசின் ஆதரவாளர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

ஜசெக துணைச் செயலாளர் ஜமாலியா ஜமாலுடினுடன் சுமார் 100 மீட்டர் நடந்து சென்ற அமிருடின், ஒற்றுமை அரசின் ஆதரவாளர்களைச் சந்தித்து அளவளாவினார்.

கடுமையான வெய்யிலுக்கு மத்தியிலும் ஆதரவாளர்களுடன் உரையாடிய சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர், அவர்களுடன் செல்ஃபி எனப்படும் தம்படமும் எடுத்துக் கொண்டார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. 

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தாவ் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட்டும், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடினும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின்னும் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கோல குபு பாரு தொகுதிக்கான தேர்தல் அதிகாரி யுஹானாஸ் அவுரி கமாருடின் 

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரா லீ கீ ஹியோங்கின் மறைவைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானார்.

இத்தொகுதியில் வரும் மே 11ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையம் நாள் குறித்துள்ளது. வரும் மே 7ஆம் தேதி தொடக்கக் கட்ட வாக்களிப்பு நடைபெறும்.

இந்த தொகுதியில் மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். இன விகிதாசரப்படி 46 விழுக்காட்டு மலாய்க்காரர்களும் 31 விழுக்காட்டு சீனர்களும் 18 விழுக்காட்டு இந்தியர்களும் இரண்டு விழுக்காட்டு இதர இனத்தினரும்  வாக்காளர்களாக உள்ளனர்.


Pengarang :