SELANGOR

கோம்பாக் நாடாளுமன்றத்தின் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

கோம்பாக், ஏப் 29: நேற்று இரவு டத்தாரான் சுங்கை துவாவில் நடைபெற்ற கோம்பாக் நாடாளுமன்றத்தின் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த திறந்த இல்ல உபசரிப்பு இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சுங்கை துவா மாநில சட்டமன்ற உறுப்பினராக இருப்பதோடு அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் டத்தோ மந்திரி புசார் அவர்கள் சிறப்பு வருகை புரிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டது, ஒற்றுமை அரசாங்கத்தில் ஒன்றிணைந்து செயல்படும் மக்களின் மனப்பான்மை வலுவடைந்து வருவதை நிரூபித்துள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது உரையில் கூறினார்.

“ஒற்றுமை அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் ஊக்கத்துடன் மாநில மற்றும் கூட்டாட்சி அளவில் நிர்வாகம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

“இந்த ஐடில்பித்ரி கொண்டாட்டம் ஒற்றுமையை வலுப்படுத்தட்டும், நம் அனைவருக்கும் இடையே எப்பொழுதும் சகோதரத்துவ உணர்வை அதிகரிக்கட்டும்” என்று அவர் கூறினார்.

மேலும், 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டூயேட் ராயாவை டத்தோ மந்திரி புசார் வழங்கினார். இந்நிகழ்வில் கொய்தியாவ்  பிரட்டல், நாசி லெமாக், ஃபிரைடு ரைஸ் மற்றும் ஃபிரைடு நூடுல்ஸ், அப்பம் பாலிக் மற்றும் ரொட்டி ஜான் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை வழங்கும் 10க்கும் மேற்பட்ட கடைகள் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவில் செலாயாங் நகராண்மைக் கழகத்தின் (எம்பிஎஸ்) கலாச்சாரப் பிரிவின் பாடல் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.


Pengarang :