NATIONAL

ஷா ஆலமுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் RM2 பில்லியன் செலவில் தொடங்கப்படும்

ஷா ஆலம், ஏப் 30: இந்த ஆண்டின் இறுதியில் பிகே என்எஸ் சதுக்கத்தின் கட்டுமானம் உட்பட செக்‌ஷன் 14 சுற்றி புத்துயிர் திட்டம் RM2 பில்லியன் செலவில் தொடங்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

இந்தத் திட்டமானது “SACC“ மால், பெராங்சாங் பிளாசா, பிகேஎன்எஸ் கொம்ப்ளக்ஸ் மற்றும் மெனாரா “MRCB“ உள்ளிட்ட தற்போதைய கட்டிடங்களையும் மேம்படுத்தும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இந்த திட்டம் 8 முதல் 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் தலைநகராக இருப்பதால் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் வழி இந்த நகரத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள் ஆகும் என்றார்.

“இந்த திட்டம் தற்போதுள்ள வளர்ச்சி மற்றும் திட்டமிடலுக்குப் புத்துயிர் அளிக்கிறது. அவற்றில் சில இன்னும் 1980 களின் கருப்பொருள் மற்றும் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை” என்று அவர் இன்று பிகேஎன்எஸ் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் சந்தித்தபோது கூறினார்.

மேலும், 2008ஆம் ஆண்டிலிருந்து மாநில துணை நிறுவனத்தின் பணப்புழக்கம் பல நேர்மறையான சாதனைகளைப் பதிவு செய்வதோடு அதிகரித்து வருவதாக அமிருடின் மேலும் கூறினார்.

“அடுத்த இரண்டு ஆண்டிகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை வளர்ச்சித் துறையில் பிகேஎன்எஸ் இன்னும் தீவிரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிகேஎன்எஸ் மேலும் பல இடங்களில் வீடுகள், வணிகப் பகுதிகளைக் கட்டுவதில் கவனம் செலுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பிகேஎன்எஸ் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மஹ்மூட் அப்பாஸ், ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகள் என கிட்டத்தட்ட 3,000 விருந்தினர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.h


Pengarang :