NATIONALSELANGOR

அனைத்துத் தரப்புகளிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்க ஜெலாஜா ரும்பன் சிலாங்கூர் திட்டம் ஏற்பாடு

அம்பாங் ஜெயா, மே 2: அனைத்துத் தரப்புகளிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்க
ஜெலாஜா ரும்பன் சிலாங்கூர் மே 9 முதல் 11 வரை சிப்பாங்கில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரை ராஜா மூடா சிலாங்கூர் தெங்கு அமீர் ஷா
வரவேற்கிறார் என ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில்
கூறினார்.

இந்நிகழ்வில் “sumbangsih“ கோப்பை போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள்
ஒரு பெரிய திரையை அமைத்து இப்போட்டியை ஒன்றாக பார்க்க மக்களை
அழைக்கிறோம்; என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

தெங்கு அமீர் ஷா உள்ளூர் மக்களுடன் நேரத்தை செலவிட விரும்புவதால் இந்நிகழ்வில்
சில மேம்பாடுகள் செய்யப்பட்டதாக ரிசாம் கூறினார்.

இதுவரை உலு லங்காட் மாவட்டத்தில் மஸ்ஜிட் அல்-உபுடியா, கம்போங் தாசெக்
தம்பஹான் (அம்பாங்), லாமன் மேடான் செலேரா அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்
ஆகிய இடங்களுக்கு தெங்கு அமீர் ஷா சென்றார்.

ஒவ்வொரு இடத்திலும் கால்பந்து பட்டறை, சிலாங்கூர் எஃப்சி வீரர்களுடன்
நடைப்பயணம், தற்காப்பு கலை நிகழ்ச்சிகள், நடனம், இசை, ரெவாங் மற்றும் விருந்து
போன்ற பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மேலும், 2024 சிலாங்கூர் பட்ஜெட்டில் உலு சிலாங்கூரில் தொடங்கி ஒன்பது
மாவட்டங்களில் இத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய RM4.5 மில்லியன்
ஒதுக்கப்பட்டுள்ளது.


Pengarang :