SELANGOR

சமூகச் சேவை தரத்தை மேம்படுத்த “WhatsApp Biz MBSJ“ திட்டம் அமல்

ஷா ஆலம், மே 2: “WhatsApp Biz MBSJ“ சேவையை செயல்படுத்திய சிலாங்கூரில் முதல் உள்ளூர் அதிகார சபையாகச் சுபாங் ஜெயா மாநகராட்சி விளங்குகிறது.

இச்சேவை, எம்பிஎஸ்ஜே மற்றும் நகர சமூகத்தினரிடையே நேரடி தகவல் தொடர்பு தளமாக அமைகிறது என்று மேயர் தெரிவித்தார்.

“ஏப்ரல் 25 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், சமூகச் சேவை வழங்கலின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று எம்பிஎஸ்ஜே நம்புகிறது.

“இது நேரம், ஆற்றல், பணம் மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் பயனர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை அளிக்கிறது” என்று சமீபத்தில் நடைபெற்ற எம்பிஎஸ்ஜேயின் மாதாந்திர முழு கூட்டத்தில் முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

ஆறு முக்கிய சேவைகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த தளம் உதவுகிறது என்று முகமட் ஃபௌசி மேலும் கூறினார்.

“அதில் எம்பிஎஸ்ஜே மதிப்பீட்டு வரி, எம்பிஎஸ்ஜே போக்குவரத்து அபராதம், வணிக உரிமம் மற்றும் அனுமதி, கட்டிட அனுமதி, கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகள் அடங்கும்.

“பயனர்கள் இச்சேவையை 03-8026 3100 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலம் எந்நேரத்திலும் பயன்படுத்தலாம் (24 மணி நேரம்)” என்று தெரிவிக்கப்பட்டது.


Pengarang :