ECONOMYMEDIA STATEMENT

இவ்வாண்டு இறுதிக்குள் 50 ஏஹ்சான் தயாரிப்பு பொருட்களை வெளியிட பி.கே.பி.எஸ். இலக்கு

உலு சிலாங்கூர், மே 5- இவ்வாண்டு இறுதிக்குள் ஏஹ்சான் முத்திரைக் கொண்ட ஐம்பது தயாரிப்பு பொருட்களை  வெளியிட சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகம் பி.கே.பி.எஸ்.) திட்டமிட்டுள்ளது.

தற்போது கோதுமை, மெதுபானங்கள், பீகூன், தக்காளி சோஸ், சாஸ் திராம், காயா பாண்டான், காயா மாடு, சார்டின், மிளகாய் சாந்து உள்ளிட்ட  30 உணவுப் பொருளை உள்ளடக்கிய சேமிப்பு பிரிவுகள் உள்ளதாக அக்கழகத்தின் சந்தைப் பிரிவு தலைமை நிர்வாகி முகமது ஃபாஸிர் அப்துல் லத்திப் கூறினார்.

இந்த பிரிவுகளை தொடர்ந்தாற்போல் நாங்கள் அதிகரித்து வருவோம். தேவையை ஈடு செய்வதற்கு ஏதுவாக அமைச்சரும் சேமிப்பு பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி பணித்துள்ளார் என அவர் சொன்னார்.

 இவ்வாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 50ஆக உயர்த்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று நேற்று இங்கு உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு மற்றும் பி.கே.பி.எஸ். ஏற்பாட்டில் நடைபெற்ற பயனீட்டாளர் விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பி.கே.பி.எஸ். வெளியிடும் ஏஹ்சான் தயாரிப்பு பொருள்களை சிலாங்கூரில் விநியோகம் செய்வதற்கு ஆர்வமுள்ள தொழில்முனைவோரை தாங்கள் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

சிலாங்கூரில் பதிவு பெற்ற வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுக் கழகங்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்களை தாங்கள் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :