ALAM SEKITAR & CUACA

கோத்தா திங்கி யில் வெள்ளம்- 300 பேர் பாதிப்பு

கோத்தா  திங்கி, மே 5- இன்று காலை 8.00  மணி நிலவரப்படி கோத்தா திங்கி  மாவட்டத்தில்  69 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் தெமெனின் பாரு மற்றும் கம்போங் டேசா மக்மூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்று ஜோகூர் மாநில அரசு செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த  தொடர்ச்சியான கன மழையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக புக்கிட் லிண்டாங் தேசியப் பள்ளியில் வெள்ள நிவாரண மையம் நேற்று திறக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள ஐந்து முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் இன்னும் வழக்கமான அளவில் உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அஸ்மி குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,  வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பயணிக்கும் போது  விழிப்புடன் இருக்கவும் எச்சரிக்கை பலகைகளைப் பின்பற்றி நடக்கவும்  வாகனமோட்டிகளுக்கு கோத்தா திங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஹுசேன் ஜமோரா  அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டார்.


Pengarang :