ECONOMY

எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில்  ஏ.ஐ. தொழில்நுட்பம்- உள்துறை அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், மே 5 – கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்பத்தை குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பயன்பாட்டை மேம்படுத்த உள்துறை அமைச்சு விரும்புகிறது என்று அதன்  அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன்  இஸ்மாயில் தெரிவித்தார்.

நாட்டின் எல்லை பாதுகாப்பு தற்போது மலேசிய எல்லை சோதனைச் சாவடி மற்றும் எல்லை முகமையின்  (எம்.சி.பி.ஏ.) கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதால் அதன் நிர்வாகத்தையும் செயல்பாடுகளையும் மேம்படுத்த அதிநவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய முக்கியமான தேவை உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

இப்போது எங்களிடம் எம்.சி.பி. ஏ. உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டில் தொழில்நுட்பம் மற்றும் புதிய  கண்டு பிடிப்புகளை எவ்வாறு மேம்படுத்துவது? அதனால்தான் 2024  ஆசிய தற்காப்புச் சேவை (டி.எஸ்.ஏ.) மற்றும் தேசிய ஆசிய பாதுகாப்பு (நாட்செக்) கண்காட்சிகளின் போது இந்த பாதுகாப்பு அம்சங்களை ஆராய உள்துறை அமைச்சு  மிகவும் உற்சாகமாக உள்ளது என்று அவர் கூறினார்.

இன்று மலேசிய அனைத்துலக  வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் டி.எஸ்.ஏ. மற்றும் நெட்செக் ஆசியா 2024 கண் காட்சிகளுக்கான இறுதி ஏற்பாடுகளை  பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டினுடன் இணைந்து ஆய்வு செய்த பின்னர்  செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :