ECONOMYMEDIA STATEMENTNATIONAL

5 தோட்ட தொழிலாளர்களுக்கு  சொந்த வீடு  மடாணி  மத்திய மாநில அரசுகள் இணைந்து அறிவிப்பு

செய்தி ; சு.சுப்பையா

பெஸ்தாரி  ஜெயா . மே.6-  தோட்டத் தொழிளாளர்கள்  சொந்த வீடு வேண்டி 26 ஆண்டு கோரிக்கைக்கு  பக்காத்தான் ஹரப்பான் மாநில மத்திய  அரசுகள்  தீர்வு கண்டது. நாட்டிலும், மாநிலத்திலும் தொழிலாளர்கள் மீதும், ஏழைகள் மீது பரிவுக் கொண்ட ஒரு அரசினால் மட்டுமே மக்கள் பயனடைய முடியும், என்பதற்கு சான்றாக  அமைந்தது  இன்றைய பக்காத்தான் ஹராப்பான்  அரசின்  சாதனை.

உலு சிலாங்கூர், கோலசிலாங்கூர் எல்லைகளில்  வீற்றிருக்கும் 5 தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் சொந்த வீட்டை பெற நடத்தி வந்த நீண்ட போராட்டத்திற்கு  தோட்ட முதலாளியுடன் மத்திய மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வந்த  நடவடிக்கை தொழிலாளர்களுக்கு சிறந்த விடிவை  தந்தது.

5 தோட்டத் தொழிலாளர்களுக்கு மடாணி அரசும்  சிலாங்கூர் மாநில அரசும் பெர்ஜாயா நிறுவனத்துடன்  கூட்டாக இணைந்து தரை வீடுகள் கட்டித் தரும். இந்த வீடுகள் யாவும் 2026 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தியாகும் என்று எதிர்பார்ப்பதாக வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கொர் மிங் தெரிவித்தார்.

245 தொழிலாளர்கள் சொந்த வீட்டு பிரச்சனை கடந்த சில தினங்களாக நாட்டிலே பேசுபொருளாக உருவெடுத்தது. இப்பிரச்னைக்கு முறையாக தீர்வு காண வேண்டும் என்று பிரதமரும் சிலாங்கூர் மாநில மந்திரி புசாரும் பேசி முடிவு செய்தனர்.

இதனையொட்டி அமைச்சர் ஙாவிடம் பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பண்டார் பெஸ்தாரி ஜெயா விலுள்ள  சுங்கை திங்கி தோட்டத்திற்கு அருகே ஒதுக்கப்பட்ட  20 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது  அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி என்பதால், மக்கள்  நலனில் அக்கறை கொண்ட அரசு இது, வேறு சாக்கு போக்கு  போக்கும் இங்கு இடமில்லை என்பதால்  தோட்ட உரிமையாளரும்  தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு  உடனடியாக செவி சாய்த்துள்ளார்.

தற்போது காலம் கணித்து 26 ஆண்டு கால சொந்த வீடு பிரச்னை தீர்வு க்கு வந்துள்ளது. 245 தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரி.ம. 75 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சார்பில் சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 35 மில்லியன் வழங்கியுள்ளது. மடாணிஅரசு ரி.ம. 40 மில்லியன் வழங்கியுள்ளது.

இந்த திட்டம் வெற்றியடைய நிதி ஒதுக்கீடு செய்த மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தனது வாழ்த்தையும் நன்றியையும் அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இந்த சொந்த வீடமைப்பு திட்டத்திற்கு 20 ஏக்கர் நிலத்தை கொடுத்த பெர்ஜாய நிறுவனத்திற்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

மாநில அரசு, மத்திய அரசு, பெர்ஜாயா நிறுவனம் ஆகிய மூன்று தரப்பினரும் கூட்டாக ஒன்று சேர்ந்து 5 தோட்டத்திலுள்ள 245 தொழிலாளர்களுக்கு  சொந்த வீடு கட்டித்தர இருக்கின்றனர் என்று அமைச்சர் ஙா தெரிவித்தார்.

அமைச்சருடன் சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் துவான் பாப்பா ராய்டு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் குணராஜ், உலு சிலாங்கூர் பி.கே.ஆர் தலைவர் டாக்டர் சத்தியபிரகாஷ், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் புவான் துளசி, ஜ.செ.க. தலைவர்கள், பி.கே.ஆர் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,  கோல சிலாங்கூர் மாவட்ட அதிகாரி, கோல சிலாங்கூர் நகராண்மை கழக தலைவர் மற்றும் இந்திய சமுதாயத் தலைவர்கள், பி.எஸ்.எம் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், 5 தோட்ட தொழிலாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.


Pengarang :