NATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தல்-தொடக்கக் கட்ட வாக்களிப்பு இன்று நடைபெறும்

உலு சிலாங்கூர், மே 7 – கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு
தொடக்கக் கட்ட வாக்களிப்பு இன்று நடைபெறும். 625
போலீஸ்காரர்கள் மற்றும் 238 இராணுவ வீரர்கள் தங்கள் துணைவியரோடு
இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நோக்கத்திறக்காக நான்காவது காலாட் படையின் ரெஜிமெண்ட் பிரிவு
மற்றும் அரச மலேசிய போலீஸ் படை அகாடமியின் பல்நோக்கு
மண்டபம் ஆகிய இடங்களில் இரு வாக்களிப்பு மையங்கள் நாளை
திறக்கப்படும்.

இந்த வாக்குச்சாடிகள் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
திறந்திருக்கும்.

இதனிடையே தொடக்க வாக்களிப்பு தினமான நாளை காலை வானிலை
சீராக இருக்கும் வேளையில் மாலையில் இடியுடன் மழை பெய்யும் என்று
மலேசியா வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு,
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தாவ், பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் எதிர்வரும் மே 11ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :