NATIONAL

வெள்ள அபாயத்தில் உள்ள பகுதிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் தயார்

கிள்ளான், மே 7: கிள்ளான் மாநகராட்சியின் விரைவு நடவடிக்கைக் குழு வெள்ள அபாயத்தில் உள்ள பகுதிகளைக் கண்காணிக்க 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது.

முன்பு வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக தனது தரப்பு வடிகால் சுத்தம் செய்யும் பணியை மேற் கொண்டதாகக் கிள்ளான் மேயர் டத்தின் படுகா நோரைனி ரோஸ்லான் கூறினார்.

“எங்களிடம் ஒரு விரைவு குழு உள்ளது. அக்குழு எந்த  இடர்  ஏற்பட்டாலும் விரைந்து செயல்படும் ஆற்றல் கொண்டது.

” இதற்கு முன்பு திடீர் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள வடிகால்களை எம்.பி.டி.கே. சுத்தம் செய்துள்ளது. குடியிருப்பாளர்களும் தங்களின் சுற்றுச்சூழலை கவனித்துக் கொள்வதில் ஒத்துழைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் கூறினார்.

நேற்று புக்கிட் ராஜா எம்.பி.டி.கே மண்டபத்தில் நடைபெற்ற ஐடில்பித்ரி நட்புறவு விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், வெள்ளிக்கிழமை வரை போர்ட் கிள்ளான் பகுதியில் ஏற்படும் உயர் அலை நிகழ்வு குறித்து விழிப்புடன் இருக்குமாறு சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.


Pengarang :