NATIONAL

குனோங் கெரியாங்கில் வழி தவறிய மூன்று இளையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

அலோர் ஸ்டார், மே 9- குனோங் கெரியாங் மலையில் காணாமல்
போனதாக கூறப்பட்ட மூன்று இளையோர் தீயணைப்பு, மீட்புப் குழுவினர்
மற்றும் மலையேறிகளுக்கான வழிகாட்டிகளின் உதவியுடன் கண்டு
பிடிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரிடமிருந்து நேற்று
மாலை 6.02 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாகக் கோத்தா ஸ்டார்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் முதலாவது மண்டலப் பிரிவின்
தலைவர் மூத்த தீயணைப்பு ஆணையர் 1 அகமது அமினுடின் அப்துல்
ரஹிம் கூறினார்.

மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த போது 19 வயதுடைய
இளைஞரும் 14 மற்றும் 17 வயதுடைய இரு பெண்களும் வழியை தவற
விட்டதாக அவர் சொன்னார்.

மலையேறிகளுக்கான வழிகாட்டிகளின் உதவியுடன் அவர்கள்
கண்டுபிடிக்கப்பட்டு கயிற்றின் மூலம் மலையின் தாழ்வான பகுதிக்கு
கொண்டு வரப்பட்டு பின்னர் மலையடிவாரம் வந்த சேர்ந்தனர் என்று அவர்
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

அந்த மூன்று இளையோரும் மருத்துவப் பரிசோதனைக்காக
அலோர்ஸ்டார் சுல்தான பாஹ்யா மருத்துவமனைக்கு கொண்டுச்
செல்லப்பட்ட வேளையில் மீட்புப் பணியின் போது காலில் காயமடைந்த
வழிகாட்டி ஒருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றார் அவர்.


Pengarang :