NATIONAL

விபத்துகளைத் தவிர்க்க முதிர்ந்த மரங்களை அகற்றுவீர்- ஊராட்சி மன்றங்களுக்கு மந்திரி புசார் உத்தரவு

ஷா ஆலம், மே 9- கோலாலம்பூர், ஜாலான் துன் இஸ்மாயிலில்
நிகழ்ந்ததைப் போல் மீண்டும் சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்ய
முதிர்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும்படி ஊராட்சி மன்றங்களை
மந்திரி புசார் பணித்துள்ளார்.

மரங்கள் வேறோடு சாய்வது மற்றும் கிளைகள் முறிந்து விழுவது போன்ற
சம்பவங்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க இந்த
பணிகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் மாநில பாதுகாப்பு மன்றக்
கூட்டத்தில் இவ்விவகாரத்தை நான் எழுப்பவிருக்கிறேன். கடுமையான
மழை அல்லது பலத்தக் காற்றின் போது மரங்கள் விழுவதை தவிர்க்க
இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய விஷயங்கள் மீது
ஊராட்சி மன்றங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்
என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

முன்னதாக அவர், எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி பெசார் கழகத்தின்
ஏற்பாட்டில் நேற்று இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில்
நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கடும் மழையின் போது ஷா ஆலம்
வட்டாரத்தில் பெரும் எண்ணிக்கையிலான மரங்கள் வேறோடு சாய்ந்த
சம்பவத்தை மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும்
நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அப்போது பெரும் எண்ணிக்கையிலான மரங்கள் சாய்ந்தன.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்படவில்லை. அந்த
சம்பவத்தை படிப்பினையாக க் கொண்டு அவர்கள் உரிய நடவடிக்கைளை எடுத்திருப்பர் என நான் நினைத்தேன். எனினும், அந்த நினைவூட்டலை நாம் தொடர வேண்டியுள்ளது என்றார் அவர்.


Pengarang :