NATIONAL

சுற்றுலாத் துறையை மேம்படுத்த கோல குபு பாருவில் வேன் சேவை- ஒற்றுமை அரசு வேட்பாளர் வாக்குறுதி

உலு சிலாங்கூர், மே 9- கோல குபு பாரு தொகுதியில் சுற்றுலாத்
துறையை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தை
உயர்த்துவற்கு ஏதுவாக இவ்வட்டாரத்தில் சுற்றுலா வேன் சேவை
அறிமுகப்படுத்தப்படும்.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத்
தேர்தலில் வெற்றி பெற்றால் தாம் முன்னுரிமை அளிக்கவிருக்கும்
திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று ஒற்றுமை அரசின் வேட்பாளரான
பாங் சோக் தா கூறினார்.

சுற்றுலாத் துறையை விரிவாக்குவதற்கும் அதிகமான சுற்றுப்பயணிகளை
ஈர்ப்பதற்கும் ஏதுவாக சுற்றுலா வேன் சேவையை நான் ஏற்பாடு செய்ய
நான் விரும்புகிறேன். சுற்றுப்பயணிகளின் நடைப் பயணத்தை
எளிதாக்குவதற்கும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் இந்த
சேவை பெரிதும் துணை புரியும் என அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் இந்த வேன் சேவையில் ஈடுபடுவோரும் வருமானம்
ஈட்டுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். இத்தேர்தலில் வெற்றி பெற்றால்
போக்குவரத்து துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும்
போக்குவரத்து அமைச்சின் உதவியுடன் இந்த திட்டத்தை
அமல்படுத்துவேன் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக அவர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று
கெர்லிங், கம்போங் பாசீர் மக்களைச் சந்தித்தோடு கடந்த ஈராண்டுகளாக
உடல் செயலிழந்த நிலையில் இருக்கும் கிராமத் தலைவர் ஹஸ்னான்
அகமதுவையும் சென்று கண்டார்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் (வயது 58)
புற்று நோய் காரணமாக கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத்
தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :