NATIONAL

பரம ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டுள்ளது

உலு சிலாங்கூர், மே 10: உலு சிலாங்கூர் மாவட்டத்தில் 10 க்கும் குறைவான ஏழை குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் பரம ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பிங்காஸ் உதவி திட்டம் மூலம் இந்தச் சாதனை நிகழ்ந்ததாக டத்தோ மந்திரி புசார் கூறினார். இன்னும் 1,000க்கும் அதிகமான பெறுநர்கள் இந்த உதவியைப் பெற உள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையை மூலம் எதிர்வரும் ஜூலையில் பூஜ்ஜிய வறுமை இலக்கை அடைய முடியும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இதற்கு முன் 861 பரம் ஏழைகள் இருந்ததாகப் பதிவுகள் காட்டின. இன்று காலை சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை கவுன்சிலின் அறிக்கையில், எண்ணிக்கை 425 ஆகக் குறைந்துள்ளது. அதாவது 50 சதவீதத்திற்கும் குறைவானது.

“முன்பு அறிவிக்கப்பட்ட 8,000 பேருடன் ஒப்பிடும்போது இப்போது சுமார் ஆறு சதவிகிதம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இந்த ஜூலையில் பரம ஏழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். அதைத் தீர்க்க சிலாங்கூர் ஜகாத் வாரியத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.


Pengarang :