SELANGOR

ரேவாங் திட்டம்   அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு  சமூக ஒருங்கிணைப்பு தளமாக  மாறியுள்ளது

அம்பாங் ஜெயா, மே 10: குடும்பப் பின்னணி, இனம் மற்றும் மதத்தை பொருட்படுத்தாமல் சமூக ஒருங்கிணைப்பு தளமாக அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கான ரேவாங் திட்டம் மாறியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தொடர்பு கொள்வதற்கும் சமூகப் பிணைப்புகளை உருவாக்குவதற்கும் பாரம்பரிய மதிப்பை இந்தத் திட்டம் புதுப்பித்ததாக வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“ஒன்று கூடும் பாரம்பரியத்தை மேலும் வலுப் படுத்துவதன் மூலம், இத்திட்டம் அடுக்குமாடி குடியிருப்பாளர்களிடையே சமூக உறவுகளை பலப்படுத்துகிறது. மேலும், குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களையும் ஒன்றிணைக்கிறது.

“இது பரஸ்பர ஒத்துழைப்பின் உணர்வையும் சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட பொறுப்புணர்வையும் வளர்க்கிறது” என்று போர்ஹான் அமன் ஷா கூறினார்.

ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத்தன்மையை வளர்ப்பதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிராம கலாச்சாரத்தை ரேவாங் திட்டம் புதுப்பிக்கிறது.

மாநில நிர்வாகத்தைப் பற்றிய தகவல்களை குடியிருப்பாளர்கள் எளிதாகப் பெறுவதற்கு அம்பாங் மற்றும் உலு லங்காட் ஆகியவை முன்னோடி பகுதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த ஆண்டு ரேவாங் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :