MEDIA STATEMENTNATIONAL

பெண் குரல் சட்ட மன்றத்தில் ஒலிக்க வாக்களிக்கும்படி அமைச்சர் டாக்டர் சலியா முஸ்தாபா வேண்டுகோள்

செய்தி ; சு.சுப்பையா

கோலக் குபு பாரு மே.9- கோலக் குபு பாரு இடைத்  தேர்தலில் இளம் வேட்பாளரான புவான் பாங்கிற்கு வாக்களித்து, பெண்ணின் குரல் சட்ட மன்றத்தில் ஒலிக்க வாய்ப்பு வழங்குங்கள் என்று பிரதமர் துறை அமைச்சில் கூட்டரசு பிரதேச அமைச்சராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் டாக்டர் சலிய முஸ்தாபா  கோலக் குபு பாரு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

கோலக் குபு பாரு, அம்பாங் பிச்சாவில் இருக்கும் பி.எஸ்.சாமி வாகனம் ஓட்டும் பள்ளியில் நடை பெற்ற மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

வேட்பாளர் புவான் பாங் வயதில் இளையவர். இளைஞர் வட்டத்தை விட்டு வெளியே சிந்திக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். இப்படிப் பட்ட இளைய வயதினருக்கு வாய்ப்பு வழங்குவதின் வழி பெரும் மாற்றத்தை முன்னேற்றத்தையும் காண முடியும். எனது அலுவலகத்திலும் 90 விழுக்காடு இளைஞர்கள் தான் வேலைச் செய்கின்றனர் என்று அவர் சுட்டி காட்டினார்.

மேலும் நான் கூட்டரசு பிரதேச அமைச்சராக முதன் முதலில் நியமிக்கப் பட்டுள்ளேன். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நானே ஓர் எடுத்துக்காட்டு. சவால் நிறைந்த இந்த அமைச்சை நான் தற்போது வழி நடத்தி வருகிறேன்.

என்னைப் போல் இத்தொகுதி வாக்காளர்களும் புவான் பாங்கிற்கு 11 ஆம் தேதி வாக்களித்து வெற்றி பெறச் செய்து அவரது குரல் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

எண் 2டைக் கொண்ட புவான் பாங் 12  தேதி முதல் இத்தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். இளமையும் துடிப்பும் ஒருங்கே பெற்றுள்ள புவான் பாங்கின் சேவை இத்தொகுதிக்குத் தேவை என்று அமைச்சர் சலியா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அவருடன் போக்குவரத்து அமைச்சர் டத்தோ அந்தோணி லோக், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு மற்றும் நூற்றுக்கணக்கான வாக்காளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியைப் பி.எஸ் சாமி நிறுவன உரிமையாளர் டத்தோ பி.எஸ்.சாமி ஏற்பாடு செய்திருந்தார். இவ் வட்டாரத்தில் மிகவும் செல்வாக்கு படைத்த இவர் பல நற் சேவைகளை வழங்கி வருகிறார்.

இந் நிகழ்ச்சியில் 200 ஓட்டுனர்களுக்கு இலவச ஜி.டி.எல் உரிமம், 100 பேருக்கு மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் கொடுக்க டத்தோ பி.எஸ்.சாமி ஏற்பாடு செய்திருந்தார்.

ஜி.டி.எல் லைசன்ஸ் இருந்தால் லாரி, டெக்சி, கிரப் வாகனங்கள் ஓட்ட முடியும்
இதன் வழி இவ்வட்டாரத்தில் உள்ள 200 பேருக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

பி.எஸ்.சாமி நிறுவனம் நல்ல நிறுவனம் என்று சாலை போக்கு வரத்து இலாக்கா அங்கீகாரம் வழங்கிய பின்னர்த் தான் ஜெ.பி.ஜெ.யின் அனுமதியோடு வந்து கலந்து கொண்டேன்.
பி எஸ்.சாமி வாகனம் ஓட்டும் பள்ளி உலு சிலாங்கூரிலேயே பெரிய பள்ளி. சிலாங்கூர் மாநில அளவில் நன் மதிப்பை பெற்ற பள்ளி என்று போக்கு வரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.


Pengarang :