MEDIA STATEMENT

விசாக தினத்தை மகிழ்ச்சி, நல்லிணக்கத்துடன் கொண்டாட மந்திரி புசார் வாழ்த்து

ஷா ஆலம், மே 22-  சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடான் ஷாரி இன்று விசாக தினத்தைக் கொண்டாடும் பெளத்த மதத்தினருக்கு  தனது  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

கௌதம புத்தரை வணங்குவதற்காக பக்தர்கள் கோவில்களுக்குச் செல்வது மற்றும்  மந்திரங்களை உச்சரிப்பது உள்ளிட்ட வழிபாட்டு முறைகளின் மூலம் இந்த  விழா சீராகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெறும்  என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

விசாக தினம் இருளைக் கடந்து ஞானம் பெற்றதன் அடையாளமாகும். இது பொதுவாக கௌதம புத்தரின் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு அங்கமாகும்.

பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்லிணக்கத்துடன் பல்வேறு சமய விழாக்களை கொண்டாடுவது சிலாங்கூரில்  சர்வசாதாரணமாக  நடைபெறும் ஒரு நிகழ்வாகும் என்று அவர் இன்று தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

சமயத்தின் மீது பற்றுதலை வளர்த்து நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை வாழ்வதன் அவசியத்தை விசாக தினம்  வலியுறுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :