ECONOMYMEDIA STATEMENT

விசாக தினத்தை பௌத்தர்கள் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்

கோலாலம்பூர், மே 22- சித்தார்த்த கௌதம புத்தர் பிறந்த, மறைந்த மற்றும் பரிநிர்வாணம் அடைந்ததைக் குறிக்கும் விசாக தினம் இன்று நாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  தலைநகரைப் பொறுத்த வரை பிரிக்பீல்ட்சில் அமைந்துள்ள மஹா விஹார பௌத்த ஆலயம் இந்த பெருநாளின் மைய இடமாக விளங்குகிறது.

மலேசியாவில் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படும் இந்த விசாக தினத்தில் பக்தர்கள் பௌத்த ஆலயங்களுக்குச் சென்று சமய மந்திரங்களை ஓதி, புனிதத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கௌதம புத்தரின் சிலையை ஊர்வலமாக கொண்டுச் செல்வர்.

இங்குள்ள புத்த விஹார ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட 20 வாகனங்கள் புடைசூழ புத்த பெருமான் இன்றிரவு ஊர்வலமாக லிட்டில் இந்தியா, பாசார் செனி, ஜாலான் ராஜா சூலான், புக்கிட் பிந்தாங் வழியாக வலம் வருவார்.

சிலாங்கூரில் விசாக தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஜென்ஜாரோம்,  ஃபூ குவாங் ஷான் டோங் ஸேன் ஆலயத்தில் இன்று காலை 8.00 மணி முதல் பக்தர்கள் திரளத் தொடங்கி விட்டனர்.

தலைநகரில் 40,000 பேர் வரை திரளக்கூடிய இந்த விசாக தின விழா வலிமையையும் பல்லின கலாசார புரிந்துணர்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது என்று தேசிய ஒற்றுமைத் துறை துணையமைச்சர் கே.சரஸ்வதி கூறினார்.


Pengarang :