ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கடை வீட்டில் தீவிபத்து- தாயும் இரு பிள்ளைகளும் பரிதாப மரணம்

பாலிக் பூலாவ், மே 25- ஜாலான் பாலிக் புலாவ் பகுதியிலுள்ள  இரண்டு மாடி கடை வீட்டில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில்  தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை 7.02 மணியளவில்  வங்கிக்கு அருகில் உள்ள ஒரு  கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக  தகவல் கிடைத்தைத் தொடர்ந்து  போலீஸ் குழு அங்கு விரைந்ததாக  பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள் ரிசால் ஜெனால் கூறினார்.

இந்த தீ விபத்தில் பெண்மணியான நூருல் பவுஸியா (வயது 58), அவரது மகன் முகமது இப்ராஹிம் ( வயது 33) மற்றும்  மகள் ரஹ்பியா ஜாஸ்மின் (வயது 20) ஆகியோர் உயிரிழந்தனர் என்று அவர் சொன்னார்.

தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்தவுடன்  தாய் மற்றும்  சகோதரருடன் தாமும் கடையை விட்டு விரைந்து  வெளியேறியதாக  இச்சம்பவத்தில் உயிர்ப் பிழைத்த அந்த பெண்ணின் 30 வயது மகன் தெரிவித்தார்.

இருப்பினும், அவரது சகோதரி வீட்டில் சிக்கியிருப்பதை உணர்ந்த  தாயும் சகோதரரும் அவரைக்   காப்பாற்ற மீண்டும் கடைக்குள் நுழைந்தனர், ஆனால் வெளியே வர முடியாதபடி அம்மூவரும் தீயில் சிக்கிக் கொண்டனர் என்று அவர் சொன்னார்.

தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் இறந்த மூன்று பேரையும் தீயணைப்புத் துறையினர்  வெற்றிகரமாக கண்டுபிடித்தனர்.

மூவரின்உ டல்களும் பிரேத பரிசோதனைக்காக பாலிக் புலாவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கமாருள்  கூறினார்.


Pengarang :