MEDIA STATEMENTNATIONAL

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மானிய சீராய்வு திட்டத்திற்கு பொருளாதார வல்லுநர்கள்  வரவேற்பு !

பெட்டாலிங் ஜெயா  மே 31 ;- இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியங்கள் குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிமின் விளக்கத்தை பொருளாதார வல்லுநர்கள்  வரவேற்றுள்ளனர்.

மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சங்கரன் நம்பியார், இந்த முயற்சியால் தேசம் அடையும் நன்மைகளை எடுத்துரைத்து, பிரதமர் பொதுமக்களிடம்  கலாச்சார  மாற்றத்தை ஏற்படுத்த முனைவதாக கூறுகிறார்.

மானிய சீராய்வு திட்டத்தினால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட் சேமிப்பை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அடுத்த படி அவர் அதை எவ்வாறு செயல்படுத்த திட்டமிட்டுள்ளார் என்பதை விளக்க வேண்டும்” என்று நம்பியார் FMTயிடம் கூறினார்.

கடந்த செவ்வாய் கிழமை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் சிறப்புரையாற்றிய அன்வார், இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம் தேவை என்று வலியுறுத்தினார்.

நீர் மற்றும் மின்சாரத்திற்கான இலக்கு மானியங்களைப் போலவே, பெரும்பாலான மக்கள் பாதிக்கப் படாமல் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

இந்த முயற்சியை சுற்றி, குறிப்பாக சமூக ஊடகங்களில் நிறைய தவறான புரிதல்களும் தவறான தகவல்களும் இருப்பதாகவும், பிரதமர் இதை சரி செய்ய விரும்பி இருப்பார் என்றும் நம்பியார் நம்புகிறார்.

” டீசல் உதவி மானியங்கள்  வழி நிறைய மானியங்கள் வீணடிக்கப் படுகின்றன என்பதில் சந்தேகமில்லை –  மானியம் தேவையில்லாத குழுக்களுக்கு செல்கிறது. மானிய சீராய்வு நடவடிக்கை மூலம் அரசு சேமிக்கும்,” என்றார்.  “நமது நிதி நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மானிய சீராய்வு செயல்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெறும் என்பதைத் தெளிவுபடுத்தும் அதே வேளையில், கொள்கை ஏன் தேவை என்பதை விளக்குவதன் மூலம் அன்வார் மக்களின் மகத்தான ஆதரவை  பெறுவார் என்றும் நம்பியார் கூறினார்.

ஆனால் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அஸ்லாம் ஹனீப், இவ்விசயத்தில் சிறிது மாறுபடுகிறார். இலக்கு வைக்கப்பட்ட மானியத் திட்டத்தை பிரதமர்  விரிவாக  விளக்காதது  சரிதான் என்றார்.

“விவரங்களை அறிவிப்பது பிரதமரின் வேலை அல்ல,” என்றும் அவர் கூறினார்.

இந்தக் கொள்கை எப்போது நடைமுறை படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இல்லாத காரணத்தால்,  பிரதமரின் அந்த அறிவிப்பு “தேவையற்றதென சாடும் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதின் விமர்சனத்தை நிராகரித்தார்  அஸ்லாம் ஹனீப், அது சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளும் அதிகாரிகளும் செய்ய வேண்டிய  பணி, அது பிரதமர் வேலை அல்ல என  அஸ்லாம் கூறினார்.

“மாறாக, இதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தங்கள் முன்மொழிவுகளை வழங்கியிருக்க வேண்டும்,” என்று அவர் FMT இடம் கூறினார்.

இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியங்கள் “மிகவும் வரவேற்கப்படுகின்றன” என்று பொருளாதார நிபுணர் கூறினார், இது விரைவில் பெட்ரோலுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியாவின் பிராந்திய அண்டை நாடுகள் எதுவும் புத்ராஜெயாவைப் போல டீசல் மற்றும் பெட்ரோலுக்கு உதவி மானியம் வழங்குவதில்லை, புருனை மட்டும் விதிவிலக்கு, மலேசியர்கள் மலிவான எரிபொருளுக்குப் பழகிவிட்டனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“அதை முழுவதும் கொடுப்பதில் அர்த்தமில்லை. இதைப் பற்றிய நமது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். மானியங்களை படிப்படியாக நீக்குவது நல்லது, ஆனால் சர்க்கரை போன்ற மற்ற ‘மோசமான’ பொருட்கள் உட்பட, அவற்றை முழுவதுமாக அகற்றுவது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும், ”என்று அஸ்லம் கூறினார்.

பெரிக்காத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் ஹம்சா, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தொலைக்காட்சி உரையை,  புத்ராஜெயா அரசு மீதான மக்களின் அவநம்பிக்கையை விரிவுபடுத்துவதாக  கூறினார். ”எப்போது மானிய சீராய்வு வழங்கப்படும், அது எவ்வாறு வழி வகுக்கப்படும் என்பதை குறிப்பிடாததால்  அவ்வாறு அவர்  சொன்னார்.
வெளிநாட்டினர் மற்றும் பணக்கார மலேசியர்களும்  மானிய உதவிப் பெறும்  எரிபொருளை பெறுவதை தடுக்க  நோக்கமாகக் கொண்டது என்று அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறியதை சுட்டிக் காட்டி உள்ளார் பிரதமர்.


Pengarang :