ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உயிரிழந்த மலேசிய மலையேறியின் உடல் அலாஸ்கா மலையிலிந்து கீழே கொண்டு வரப்பட்டது

கோலாலம்பூர், ஜூன் 3- அலாஸ்காவின் டெனாலி மலையில் ஏறும் முயற்சியின் போது உயிரிழந்த மலேசியரான ஜூல்கிப்ளி யூசுப்பின் உடல் மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டது.

இந்த தகவலை அல்பைன் கிளப் மலேசியா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த 37 வயது மலையேறியின் உடலை மீட்புப் பணியாளர்கள் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் மலையடிவாரத்திற்கு கொண்டு வந்ததாக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மலேசிய தூதரக அலுவலகத்திடமிருந்து நாங்கள் தகவலைப் பெற்றுள்ளோம் என அந்த பதிவு கூறியது.

அவரது உடல் அலாஸ்கா, என்கோராஜ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை மலேசியாக்கு கொண்டு வருவதற்கு  காப்புறுதி நிறுவனத்துடன் பேச்சு நடத்துவதில் தூதரக அதிகாரிகள் அவரின் குடும்பத்தினருக்கு உதவி வருகின்றனர்.

இரு இதர மலையேறிகளான முகமது இல்ஹாம் இஷாக் (வயது 47) மற்றும் ஜைனுடின் லோட் (வயது 47) ஆகிய இருவரும் உறைபனி காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த பேஸ்பு பதிவில் மேலும் குறிப்பிட்டது.

வட அமெரிக்காவின் மிக உயந்த மலையான டெனாலி மலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று மலேசியர்களில் ஒருவர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 மீட்டர் உயரத்தில் இருக்கும் போது வழிதவறியதாக அல்பைன் கிளப் மலேசியா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

ஜூல்கிப்ளி பனிக் குகையில் அடைக்கலம் நாடியிருந்த போது கடந்த மே 29ஆம் தேதி  விடியற்காலை 6.00 மணியளவில் உயிரிழந்ததாக அந்த கிளப் கூறியது.


Pengarang :