MEDIA STATEMENT

மலிவு விற்பனையை நடத்துவதற்கு இணையம் வழி விண்ணப்பிக்க பி.கே.பி.எஸ். ஏற்பாடு

ஷா ஆலம், ஜூன் 16- மலிவு விற்பனையை நடத்துவதற்கு இணையம் வழி விண்ணப்பம் செய்வதற்கான வசதியை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாடு செய்துள்ளது.

இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையை ஏற்பாடு செய்ய விரும்புவோர் https://forms.gle/3xE6acRZRv17X2zT6 என்ற இணைப்பின் வாயிலாக அல்லது கீழ்க்காணும் போஸ்டரில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று அக்கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையை ஏற்பாடு செய்ய விரும்புவோர் சட்டமன்ற உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள், ஊராட்சி மன்றங்கள், கவுன்சிலர்கள் மற்றும் அரசாங்க இலாகாக்கள் மூலம் அதற்கான விண்ணப்பத்தை செய்யலாம் என்று பி.கே.பி.எஸ். வர்த்தக மற்றும் சந்தைப் பிரிவு தலைமை நிர்வாகி ரோஸ்னானி அப்துல் மாலிக் கடந்த ஜனவரி 15ஆம் தேதி கூறியிருந்தார்.

மாநில அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்,  ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

கடந்தாண்டு நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.


Pengarang :