MEDIA STATEMENT

டுரியான் தோட்டத்திற்குச் சென்ற பாட்டியும், பேத்தியும் வழி தவறினர்

கோலாலம்பூர், ஜூன் 17-  கோல குபு பாரு, புக்கிட் பூலோ தெளுரில் உள்ள டுரியன் தோட்டத்திற்கு   சென்ற மூதாட்டியும்  அவரின் 12 வயது பேத்தியும்  வழிதவறிச் சென்றதாக அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 3.12 மணியளவில் தமது தரப்புக்கு  அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து கோல குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இரவு 7.20 மணி வரை தொடர்ந்ததாகவும்  இருள் மற்றும் வானிலை (மழை) காரணமாக தேடும் பணி  நிறுத்தப்பட்டதாகவும்  அவர் நேற்றிரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இன்று காலையும் தொடர்ந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட பெண்  தனது மகனை மதியம் 12.00 மணியளவில் தொடர்பு கொண்டு தாங்கள்  வழிதவறிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.  இதையடுத்து நேற்று மாலை 3.00 மணியளவில் அவரது மூத்த மகன் போலீசில் புகார் செய்தார் என்றார் அவர்.


Pengarang :