ANTARABANGSAMEDIA STATEMENT

மலேசியாவும் பாகிஸ்தானும் காஸா மக்களுக்கு ஆதரவை புலப்படுத்தின

கோலாலம்பூர், ஜூன் 18 – ஜியோனிஸ இஸ்ரேல் ஆட்சியின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு மலேசியாவும் பாகிஸ்தானும் தங்களின் தொடர்ச்சியான ஆதரவைப் புலப்படுத்தியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பிடமிருந்து  நேற்று தொலைபேசி அழைப்பைப் பெற்றபோது  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.

காஸா நெருக்கடி தொடர்பாக பாகிஸ்தானின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதில் பிரதமர் ஷெபாஷின் தைரியத்திற்காகவும் நான் அவரைப் பாராட்டினேன்.

இஸ்ரேலின் காலனித்துவம் மற்றும் காஸா மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கும் அதே வேளையில் மற்ற இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களும் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க தங்கள் ஆதரவைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் விரைவில் சந்திக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் வழி இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என்று அன்வார் கூறினார்.

இந்த தொலைபேசி அழைப்பின் போது அன்வார் மற்றும் ஷெபாஷ் ஹஜ்ஜூப் பெருநாள்  வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


Pengarang :