KUALA LUMPUR, 29 Okt –– Menteri Kewangan Tengku Datuk Seri Zafrul Abdul Aziz ketika membentangkan Bajet 2022 di Parlimen hari ini. –fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA PUTRAJAYA, Oct 29 — Finance Minister Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz tabling the 2022 Budget in the Parliament today. —fotoBERNAMA (2021) COPYRIGHT RESERVED
ECONOMYNATIONAL

பலவீனமான ரிங்கிட், அதிக உதவி மானியம்  போட்டித்தன்மையை குறைத்து விட்டது என்கிறார் அமைச்சர் தெங்கு ஸப்ருல்

கோலாலம்பூர்: உலகப் போட்டித் திறன் தரவரிசையில் மலேசியா 34-வது இடத்துக்குத் தள்ளப்படுவதற்கு ரிங்கிட் மற்றும் அரசாங்கத்தின் அதிகச் செலவினம் ஆகியவையே காரணம் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஜிஸ் கூறுகிறார்.

பலவீனமான ரிங்கிட், இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட்டின் (ஐஎம்டி) இன்டெக்ஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட பல அம்சங்களையும் பாதித்துள்ளது, உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் உட்பட. “2023 ஆம் ஆண்டில், ரிங்கிட் பாதிக்கப்பட்டது, அதனால் நமது போட்டித்தன்மை பாதிக்கப்பட்டது. இருப்பினும், ரிங்கிட் வலுப்பெறகிறது, அந்த வேகம் தொடரும் என்று நம்புகிறேன்.

“அடுத்த ஆண்டு தரவரிசையில் நாங்கள் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்,” என்று அவர் இன்று புர்சா மலேசியாவின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

உக்ரைன்-ரஷ்யா போரின் பொருளாதார விளைவுகளின் மீது பழி சுமத்தி, கடந்த ஆண்டு அரசாங்கம் அதன் வரவுசெலவுத் திட்டத்தை மீறியதாக தெங்கு ஸப்ருல் அஜிஸ்  கூறினார்.

“பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட செலவழிக்கப் பட்டது அதிகமாக இருந்தது, எனவே இது திறமையின்மையை காட்டுகிறது. கடந்த ஆண்டு, உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக மூலப் பொருட்களின் விலை உயர்ந்தது.

Send

Pengarang :