MEDIA STATEMENTNATIONAL

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல்- ஹராப்பான்-பெரிக்கத்தான் நேஷனல் இடையே நேரடிப் போட்டி

நிபோங் திபால், ஜூன் 22- சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

பி.கே.ஆர். கட்சியின் வலுவான கோட்டையான இத்தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்கு பக்கத்தான் ஹராப்பான் அமினுடின் பாக்கி கல்விக் கழக வட பிராந்தியத்தின் முன்னாள் இயக்குநர்  ஜோஹாரி அரிபினை களமிறக்கியுள்ள  வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் நிபோங் திபால் தொகுதி பாஸ் கட்சியின் துணைத் தலைவர் அபிடின் இஸ்மாயில் நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற பினாங்கு மாநிலத் தேர்தலில் கைப்பற்றிய இத்தொகுதியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள பெரிக்கத்தான் நேஷனல் முழுமூச்சில் களமிறங்கியுள்ளது.

இன்று காலை தாமான் டேசா ஜாவியில் உள்ள ஜாவி சமூக மண்டபத்தில் தேர்தல் அதிகாரி கைருள்நிசாம் ஹஷிம் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்.


Pengarang :