ECONOMYNATIONAL

டிரெய்லர் லோரி மோதி, சாலையைக் கடந்த ஆறு மாடுகள் மடிந்தன

அலோர் காஜா, ஜன 22- இங்குள்ள ஜாலான் செரேனா பூத்தேவில் இன்று அதிகாலை 5.10 மணியளவில் டிரெய்லர் லோரி மோதி  ஆறு மாடுகள் இறந்தன.

இச்சம்பவம் நிகழ்ந்த போது 33 வயது நபர் செலுத்திய டிரெய்லர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தாமான் புக்கிட் தம்பினிலிருந்து அலோர் காஜா நோக்கி சென்று கொண்டிருந்ததாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அஸாரி அபு சமா  கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது கும்பலாக சாலைக் கடந்த மாடுகள் மீது அந்த டிரெய்லர் மோதியது. இந்த விபத்தில் ஆறு மாடுகள் மடிந்தன என்று அவர் சொன்னார்.

இவ்விபத்தில் மடிந்த மாடுகளை அகற்ற ஏபிஎம் எனப்படும்  பொது தற்காப்புப் படையின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததோடு சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளும் இல்லை என்று அவர் சொன்னார்.

இந்த விபத்தில் லோரி ஓட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறிய அவர், 1959ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து விதிகளின் 10வது பிரிவின் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :