NATIONALSUKANKINI

அஸீம், ஷெரீன் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர்

கோலாலம்பூர், ஜூன் 23: கஜகஸ்தான் ஓப்பன் சாம்பியன்ஷிப்பில் எதிர்பார்த்த முடிவை வழங்க தவறியதால், இரண்டு தேசிய ஓட்டப்பந்தய வீரர்களான முஹம்மது அஸீம் முகமட் ஃபஹ்மி மற்றும் ஷெரீன் சாம்சன் வல்லபோய் ஆகியோர் பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர்.

இரண்டு ஓட்டப்பந்தய வீரர்களும் இதற்கு முன்  தகுதி பெறத் தவறிய பின்னர், ஒலிம்பிக் தகுதித் தரவரிசையின் மூலம்  தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பு இந்தப் போட்டியாகும்.

சாம்பியனாக வெளிவர வேண்டும் என்ற நோக்கத்துடன் களம்  இறங்கிய முஹம்மது அஸீம், தனது தரவரிசையை மேம்படுத்த  10.20 வினாடிகள் (வி) பதிவு செய்ய வேண்டும். அனால், இறுதி ஆட்டத்தில் 10.37 வினாடிகளில்  ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்து திருப்தி அடைய வேண்டியதாயிற்று. இதில்  தாய்லாந்து ஸ்பிரிண்ட் சாம்பியனான புரிபோல் பூன்சன் 10.23 வினாடிகளில் ஓடி முதலிடத்தையும், துருக்கியைச் சேர்ந்த கய்ஹான் ஓசர் 10.25 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதற்கிடையில், ஷெரீன் 400 மீட்டர் போட்டியில் 52.60 வினாடிகளில்  ஓடி இதர தடகள வீராங்கனைகளான அன்னா ஷுமிலோ (56.01 வி) மற்றும் மிலானா ஜுபரேவா (57.80 வி) ஆகியோரை வென்று சாம்பியனாக உருவெடுத்தார், ஆனால் தேசிய சாதனையான 51.79 வினாடிகளை முறியடிக்கும் பணியில் தோல்வியடைந்தார்.

நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் ஒலிம்பிக் தகுதித் தரவரிசைப் புதுப்பிப்பில், ஷெரீன் 48வது சிறந்த வீராங்கனையாகவும், முஹம்மது அஸீம் 56வது நிலையை தாண்டிச் செல்ல வேண்டும்.

இதற்கிடையில், தடகள யூனியன் ஆஃப் மலேசியாவின் (KOM) தொழில்நுட்ப இயக்குனர் ராபர்ட் ஜே பலார்ட், இரு தேசிய ஓட்டப்பந்தய வீரர்களும் பாரிஸுக்கு தகுதி பெறுவதற்கு அதிக போராட்டத்தை  வெளிப்படுத்தியதாக விவரித்தார்.

“துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதி பெற முடியவில்லை. ஆனால், உலகில் இதுவரை 30 தடகள வீரர்கள் மட்டுமே அந்தந்த போட்டிகளில் தகுதியின் அடிப்படையில் தகுதி பெற்றுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.


Pengarang :