ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் 2024 ஏற்றுமதி தினத்தை மாட்ரேட் நடத்தும்

கோலாலம்பூர், ஜூன் 30-  சிலாங்கூர், மலாக்கா, பேராக், கோலாலம்பூர், சரவா, பினாங்கு ஆகிய ஆறு மாநிலங்களில்  2024 ஏற்றுதி தினத்தை மாட்ரேட் எனப்படும் மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகம் நடத்தவுள்ளது.

மலாக்காவின் எம்.ஐ.டி.சி ஆயர் குரோவில் வரும் ஜூலை மாதம் 2 மற்றும் 3ஆம் தேதிகளிலும் பினாங்கு, ஓலிவ் கிரீன் ஹோட்டலில் 22 மற்றும் 23ஆம் தேதிகளிலும் இந்த தினம் நடைபெறும் என்று மாட்ரேட் அறிக்கை ஒன்றில் கூறியது.

மலாக்கா 2024 ஏற்றுமதி தின நிகழ்வில் பங்கேற்க இதுவரை 45 சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் துறைகளைச் சேர்ந்த 75 பங்கேற்பாளராகள் பதிந்து கொண்டுள்ளதாக அது தெரிவித்தது.

ஏற்றுமதி அமைப்புகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு துறைகளிடமிருந்து  ஏற்றுமதி தொடர்பான அடிப்படை வழிகாட்டியை  சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் பெறுவதற்கான தளமாக இந்த ஏற்றுமதி தினம் விளங்குகிறது என்று மாட்ரேட் மேலும் குறிப்பிட்டது.

2024 ஏற்றுமதி தினம் என்பது மாநில அரசுகள் மற்றும் விவேக பங்காளிகளுடன் மாட்ரேட் இணைந்து நடத்தும் வருடாந்திர ஏற்றுமதி ஊக்குவிப்பு நிகழ்வாகும்.

 


Pengarang :