ECONOMYNATIONAL

ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தை  உடைப்பதில் சத்தம், தூசி தொந்தரவுகளை குறைக்க முழுமுயற்சி

ஷா ஆலம், ஜூலை 2: சிலாங்கூர் (மந்திரி புசார் கட்டமைப்பு) எம்பிஐ, ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தின் (KSSA) மறு மேம்பாட்டில்  அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு இடையூறு  ஏற்படுத்தும் சத்தம், தூசி, போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றின் கூறுகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

சிலாங்கூர் (மந்திரி புசார் கட்டமைப்பு) எம் பி ஐ யின் தலைமை நிர்வாக அதிகாரி சைபோல்யாசன் எம் யூசோப், உள்ளூர் அதிகாரிகளிடம்  பணி ஒப்படைக்கும் போது இந்த   கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

“இது ஒரு போக்குவரத்து ஆய்வையும் உள்ளடக்கியது, இதனால்   சத்தம், தூசி மற்றும் போக்குவரத்து   போன்ற பலவற்றின் அடிப்படையில்  முடிந்தவரை  பூஜ்ஜிய இடையூறாக,  குறைந்தபட்சம்  அசௌகரியமாக  இருக்கும் என அவர் கூறினார்,   என்கிறது  ஹரியன் மெட்ரோ.

மேலும், இந்த வளாகத்தில் உள்ள 10 ஏக்கர் நிலம் வெள்ள நிவாரணத் திட்டங்களுக்காக மத்திய அரசின் கீழ்  வடிகால் துறையிடம் (ஜேபிஎஸ்) ஒப்படைக்கப்பட்டது. அதனை  “ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தத் திட்டத்துடன் இணைந்து  அது  செயல்படுத்த உள்ளதாகவும் தனக்குத் தெரிவிக்கப்பட்டது   என்றார்.

அது 2021 இல் நடந்த வெள்ள பிரச்சனை போன்று செக்சன்  13 ல் மீண்டும்  நிகழாமல் இருக்கவும்  வெள்ள  பிரச்சனைகளுக்கு   நீண்டக்கால தீர்வாகவும்  அது விளங்கும்  என நம்புகிறார்.

விளையாட்டு அரங்கத்தின்  வளர்ச்சியானது தொழில்நுட்ப மற்றும் புதிய தொழில்களான பசுமை அல்லது சூரிய சக்தி தொழில்கள் உட்பட பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று சாய்பொல்யாசன் மேலும் கூறினார்.

மேலும், சில்லறை வணிகம், போக்குவரத்து மையங்கள், இலகுரக ரயில் போக்குவரத்து (எல்ஆர்டி) நிலையங்கள், உட்புற திரையரங்குகள், சந்தைப்படுத்தல், உணவு மற்றும் குளிர்பானங்கள் ஆகிய துறைகளிலும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

“இந்த பகுதியில் உள்ள ஹோட்டல் மூலம், பல்வேறு நிலைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். விளையாட்டுத் துறையில், மார்ஷல் போன்ற வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன,” என்றார்.

இதற்கிடையில், இடிப்பு செயல்முறை இரண்டு ஹைட்ராலிக் பிரேக்கர் வகை இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது, இது குடியிருப்பாளர்களுக்கு சத்தம், தூசி மற்றும் நீர் இடையூறுகளைத் தவிர்க்க வெடிபொருட்கள் இல்லாத ஒரு வழக்கமான முறையாகும்.

“இடிக்கும் பணி ஒரு வருடம் நீடிக்கும், இந்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் கட்டிடத்தின் கூரை உடைக்கும் பணி தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அக்டோபரில் இடிப்புப் பணிகள் ஒரு பகுதி நிறைவு பெறும், புதிய மைதானம் கட்டும் பணியை விரைவுபடுத்தும் வகையில், மேம்பாலப் பணியை ஒப்பந்ததாரர் துவக்குவார்,” என்றார்.


Pengarang :