ECONOMYNATIONAL

மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதையடுத்து, சுங்கை பாக்காப் மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

நிபோங் திபால் – காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட ஒன்பது வாக்குச்சாவடி மையங்களும் மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதையடுத்து, சுங்கை பாக்காப் மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.

தாசேக் தேசியப் பள்ளி, பூன் பெங் சீன ஆரம்பப் பள்ளி, பண்டார் தாசேக் முத்தியாரா தேசியப் பள்ளி, ஸ்ரீ தாசேக் தேசியப் பள்ளி, சுங்கை டூரி தேசியப் பள்ளி, துன் சைட் சே பராப்பா தேசியப் பள்ளி, சுங்கை பாக்காப், ஜாவி தேசியப் பள்ளி மற்றும் சுங்கை கெச்சில் தேசியப் பள்ளி ஆகிய இடங்களில் அந்த ஒன்பது வாக்கு மையங்கள்  மூடப்பட்ட உடனேயே, 65 வாக்கு சாவடிகளிலிருந்து இருந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும்  அருகிலுள்ள டேவான் செர்பகுனா ஜாவியில் உள்ள அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

சுங்கை பாக்காப்  மாநில சட்டமன்ற தொகுதிக்கு, மாலை 4 மணி நிலவரப்படி, புதிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்காக பதிவு செய்யப்பட்ட 39,151 வாக்காளர்களில் 57.7 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 39,279 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதில் 57 காவல்துறை உறுப்பினர்கள் உள்ளனர். எவ்வாறாயினும்,   ஜூலை 2 ஆம் தேதி தேதி  முன்கூட்டியே வாக்களிக்க நாள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், தகுதியான வாக்காளர்கள்  128 தபால்   வழி வாக்களிக்க  இசைந்ததால்  தேர்தல் ஆணையம் கூட்டியே வாக்களிக்கும் மையங்களை திறக்கவில்லை.

இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி ஆரிஃபின் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) சார்பில் நிபோங் திபால் பாஸ் துணைத் தலைவர் அபிடின் இஸ்மாயில் ஆகியோருக்கு இடையே நேரடிப் போட்டியானது.

மே 24 அன்று வயிறு வீக்கத்தால் PAS இன் சட்டமன்ற உறுப்பினர்  நோர் ஜம்ரி லத்தீஃப் இறந்ததைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. – பெர்னாமா


Pengarang :