ANTARABANGSAMEDIA STATEMENT

இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38,153 பேராக அதிகரிப்பு

காஸா, ஜூலை 8- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 38,153 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் நேற்று கூறினர்.

இஸ்ரேலியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் 55 போர் கொல்லப்பட்டு மேலும் 123 பேர் காயமுற்றனர். இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி நிகழ்ந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,153 பேராக உயர்ந்துள்ளது. மேலும், இத்தாக்குதல்களில் 8த7,828 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த மருத்துவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

இது தவிர போரினால் பாதிக்கப்பட்ட மேலும் பெரும் எண்ணிக்கையிலானோர் கட்டிட இடிபாடுகளிலும் சாலைகளிலும் சிக்கித் தவித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் மற்றும் பொது தற்காப்பு பணியாளர்களுக்கு இஸ்ரேலிய படைகள் விதித்த தடைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

காஸாவில் கடந்த ஒன்பது மாதங்களாக நிகழ்ந்து வரும் போரின் காரணமாக அங்குள்ள  குடும்பங்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளதோடு பேரழிவினால் பாதிக்கபட்டு பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மேற்காசியாவிலுள்ள பாலஸ்தீன அதிகளுக்கான அமைப்பு நேற்று தெரிவித்தது.

அடிப்படை பொருள் விநியோகம் குறைந்து வருவது, கடும் வெப்ப வானிலை மற்றும் நோய்ப் பரவலால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலை எதிர்நோக்கி வருகின்றனர் என அது குறிப்பிட்டது.

 


Pengarang :