MEDIA STATEMENTNATIONAL

ஆர்ப்பாட்டப் பகுதிகளுக்கு செல்வதைத்  தவிர்ப்பீர்- இங்கிலாந்திலுள்ள மலேசியர்களுக்கு அறிவுறுத்து

புத்ராஜெயா, ஆக 5 – இங்கிலாந்தில்  வசிக்கும் அல்லது அந்நாட்டிற்கு  பயணிக்கும் மலேசியர்கள் போராட்டப் பகுதிகளைத் தவிர்ப்பதோடு எந்நேரமும் விழிப்புடன் இருக்கவும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளை மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கவும்  வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 29ஆம் தேதி   சவுத்போர்ட்டில் நிகழ்ந்த  கத்திக் குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்தின்  பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும்  போராட்டங்களை கருத்தில்  கொண்டு வெளியுறவு அமைச்சு மலேசியர்களுக்கு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் இன்னும்  பதிவு செய்யாத மலேசியர்கள் சரியான நேரத்தில் தகவல் மற்றும் உதவியைப் பெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக     உடனடியாக அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தை  45-46 பெல்கிரேவ் சதுக்கம், லண்டன்,  இங்கிலாந்து, தொலைபேசி +44 20 3931 6196/+44 20 7235 8033 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
லண்டனில் உள்ள மலேசிய தூதரகம்  மூலம் அரசாங்கம்  நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும்  ஏதேனும் முன்னேற்றங்கள் இருந்தால் அது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியது

Pengarang :