MEDIA STATEMENTSELANGOR

நதியை மாசுபடுத்திய குற்றத்திற்கு, RM 10 மில்லியன் அபராதம், சிறை

புத்ராஜெயா, ஆகஸ்ட் 9: சிலாங்கூர், குவாங், ஜாலான் கம்போங் ஓராங் அஸ்லி அருகில்,  கடந்த மாதம்  தொழில்துறை பகுதியில் ஆற்று நீரில் ரசாயன கழிவுகளை வெளியேற்றிய குற்றத்திற்காக, சீன நாட்டவருக்கு 10 மில்லியன் ரிங்கிட் அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

சிலாங்கூரில் உள்ள செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நோர் ராஜ்யா மாட் ஜின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  வழக்கில், 42 வயதான அந்த நபர் குற்றத்தை மறுத்து  விசாரணை கோரினார் என்று   சுற்றுச்சூழல் துறை (DOE) இயக்குநர் ஜெனரல் டத்தோ வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாபர் தெரிவித்தார்.

ஜூலை 23 அன்று சுங்கை சிலாங்கூர்  ஏற்பட்ட மாசுபாட்டால் ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு ஆலையில் (LRA) துர்நாற்றம் வீசத் தொடங்கியது மற்றும் சுங்கை சிலாங்கூர்  கட்டம் 1,  2 மற்றும் 3 ஆகிய  நீர் சுத்திகரிப்பு ஆலையில் வேலை தடை போன்ற ஒரு சம்பவத்தை ஏற்படுத்திய செயலைச் செய்ததாக அந்த நபர்  மீது குற்றம் சாட்டப்பட்டது.

சுற்றுச்சூழல் தரச் சட்டம் (திருத்தம்) 2024 (AKAS) பிரிவு 25(3) இன் கீழ் உள்ள குற்றச்சாட்டுகள், அதே சட்டத்தின் பிரிவு 25(1) உடன் படிக்கப்படும்.

சிலாங்கூர் அரசு  துணை தலைமை பொது  வழக்கறிஞர் ராஜா ஜெய்னுல் ஃபரிதா ராஜா ஜஹாருதீன் மற்றும் சுற்றுச்சூழல்  துறை துணை தலைமை   வழக்கறிஞர் நூர்லியானா ஆர் ஆஸ்மி ஆகியோர் வழக்குத் தொடுத்ததாக அவர் கூறினார்.

“நீதிபதி நோர் ராஜையா குற்றம் சாட்டப்பட்டவருக்கு  ஜாமீனை அனுமதிக்கவில்லை, மேலும் செப்டம்பர் 10 ஆம் தேதி ஆவணத்தை ஒப்படைக்கும் தேதியாக நிர்ணயித்தார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஜூலை 23 அன்று, சிலாங்கூரில் உள்ள சுங்கை குண்டாங் மற்றும் சுங்கை செம்பாவில் துர்நாற்றம் மாசுபாடு சம்பவங்களைத் தொடர்ந்து நான்கு LRA களின் பணி நிறுத்தம் காரணமாக கிள்ளான்  பள்ளத்தாக்கு ஏழு பிராந்தியங்களில் 1,000 க்கும் மேற்பட்ட பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழில் துறையினர் உட்பட எந்த ஒரு தரப்பினருக்கும் AKAS இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வான் அப்துல் லத்தீஃப் கூறினார்.

AKAS 1974 திருத்தப்பட்டு 7 ஜூலை 2024 முதல் நடைமுறைக்கு வந்தது, ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் கட்டாயச் சிறைத்தண்டனையுடன் கூடுதலாக RM5,000 முதல் RM 10 மில்லியன் வரையிலான அபராதங்கள் உட்பட தண்டனைகள்,  மற்றும் அபராதங்கள் ஆகியவை வழங்க திருத்தம் முன்னுரிமை அளிக்கிறது.


Pengarang :