ECONOMYSELANGOR

300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கோலா லங்காட் ஜாப்கேர் டூவர் நல்ல வரவேற்பை பெற்றது

கோலா லங்காட், ஆகஸ்ட் 10: டேவான் ஸ்ரீ ஜுக்ராவில் நடைபெற்ற சிலாங்கூர் ஜாப்கேர் சுற்றுப்பயணத் தொடர் நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி 300க்கும் மேற்பட்ட நபர்கள் வருகையுடன் நல்ல வரவேற்பை பெற்றது.

அவர்களில் ஐந்து பேர் உடனடியாக பணியமர்த்தப் பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் இரண்டாவது நேர்காணலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் மனிதவள EXCO வி பாப்பராய்டு கூறினார்.

“இந்த சுற்றுப்பயணத்தின் மூன்றாவது இடம்  இது,  ஆண்டு முழுவதும் மேலும் ஆறு இடங்களுக்கு  இது  செல்லும். பல்வேறு துறைகளில் உள்ள 33 நிறுவனங்கள் காலியிடங்களை வழங்கியதற்கு கிடைத்த பதில் மிகவும் ஊக்கமளிக்கிறது.

“உண்மையில் இந்த சுற்றுப்பயணம் வேலை தேடுபவர்களுக்கு மட்டும் திறக்கப்படவில்லை, பள்ளி மாணவர்களும் எதிர்காலத்தில் அவர்களுக்கு தக்க  வேலை வாய்ப்புகளைக் கண்டறிய அவர்கள் கலந்துகொள்ள அழைக்கப் படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 18 வயதான ஆர் ஹரிஷ் ராஜ், வேலை வாய்ப்பு பயணத் திட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் தனக்குப் பொருத்தமான வேலை கிடைக்கும்  என்று நம்புகிறார்.

“பள்ளி கல்வி முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். எனது படிப்பை அடுத்த ஆண்டு உயர்நிலைக்கு தொடர கொஞ்சம் பணம் சேகரிக்க திட்டமிட்டுள்ளேன்.

“இன்னும் பள்ளியில் படிக்கும்  தனது  நான்கு இளைய சகோதரர்களை என் தந்தை வேலை செய்து ஆதரிக்க வேண்டும். நான் என் தந்தைக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை, என் படிப்பைத் தொடர நான் பணம் சம்பாதிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

பெரானாங்கில் வசிக்கும் 24 வயதான ரிஸ்க் ஃபிக்ரி ஆஸ்மி,  இன்று பந்திங்கில் நடைபெறும் வேலை வாய்ப்பு சந்தையில் கலந்துகொள்வதற்காக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பயணித்ததாக கூறினார்.

“இதற்கு முன்பு நான் ஒரு தொழில்நுட்ப உதவியாளராகவும், விற்பனை துறையிலும் பணிபுரிந்தேன், ஆனால்  அவ்வேலையை விட்டுவிட்டேன். இந்த வேலை வாய்ப்பு சந்தை பற்றி தெரிந்ததும், சற்றுத் தொலைவில் இருந்தாலும் கலந்து கொள்ள முடிவு செய்தேன்.
“எனக்கு இந்த  வேலை வாய்ப்பு சந்தை பற்றி  நன்றாக தெரியும், ஏனென்றால்  வேலை தேடுபவர்கள் எங்கள் தகுதிகளுடன் பொருந்தக்கூடிய மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் பல நிறுவனங்களுக்கு எங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஒன்பது மாவட்டங்களில் நடந்த சிலாங்கூர் ஜாப்கேர் சந்தையில் சுமார் 35,000 வேலை வாய்ப்புகள் வழங்கப் பட்டதாக பந்திங் மக்களின் பிரதிநிதியான பாப்பா ராய்டு  தெரிவித்தார்.

இதுவரை, ஜூன் 29 அன்று உலு சிலாங்கூரிலும், பெட்டாலிங் ஜெயாவிலும் (ஜூலை 17) இன்று கோலா லங்காட்டிலும் இந்தப் பயணம் நடைபெறுகிறது.

MPAJ டவுன் ஹால், உலு லங்காட் (ஆகஸ்ட் 17), தாமான் ஸ்ரீ கோம்பாக் பெரிங்கின் ஹால் (செப்டம்பர் 21), டத்தோ ஹம்சா மண்டபம், கிள்ளான், (அக்டோபர் 5) மற்றும் டத்தோ பெங்காவா பெர்மாத்தாங் ஹால், கோலா சிலாங்கூர் (அக்டோபர் 19) ஆகிய இடங்களில் வேலை வாய்ப்பு சந்தை தொடரும்.
அடுத்து  சாலாக் பாரு டிங்கி சமூகக் கூடம், சிப்பாங் (நவம்பர் 16) மற்றும் துன் ரசாக் மண்டபம், சபாக் பெர்ணம் (டிசம்பர் 14) ஏற்பாடாகியுள்ளது.


Pengarang :