ECONOMYNATIONAL

மூன்று குடும்ப உறுப்பினர்களை கொன்ற வழக்கின் சந்தேக நபருக்கு ஏழு நாட்கள் தடுப்பு காவல்

மூவார், ஆகஸ்ட் 14: கடந்த வெள்ளிக்கிழமை கம்போங் பாயா ரெடான், பாகோவில் தனது பெற்றோர் உட்பட மூன்று குடும்ப உறுப்பினர்களை கொன்றபின் வீட்டிற்கு தீ வைத்த  சம்பவத்தின்  பிரதான சந்தேக நபர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேல் விசாரணைகளை மேற்கொள்ள, 48 வயதான சந்தேகநபரை ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஜிஸ்திரேட் வாதின் டலிலா காலிட் உத்தரவிட்டார்.

சந்தேக நபர் கடுமையான காவல் துறையினரின் பாதுகாப்புடன் காலை 9.13 மணியளவில் மூவார் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் புக்கிட் பிந்தாங், கோலாலம்பூர் என்ற இடத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சந்தேக நபரின் கைது ஜோகூர் காவல்துறையின் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மூவார் மாவட்டக் காவல்துறையின் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.

குற்றவியல் கூறுகள் இருப்பதைக் கண்டறியும் முன், ஆரம்பத்தில் இந்த வழக்கை திடீர் மரணம் என்று காவல்துறையினர் வகைப்படுத்தினர் மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.


Pengarang :