MEDIA STATEMENT

ஒருமைப்பாட்டை வலுப்படுத்த தவறியது யார் குற்றம்?

மலேசியர்களிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதில் தோல்வி கண்டிருப்பதாக கூறியிருக்கும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஷாஹிட் ஹமிடி இந்த தோல்விக்கு யார் காரணம்?எது காரணம் என்பதையும் வெளிப்படையாக ஆராய வேண்டும் என காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்னன் நினைவுறுத்தினார்.

இந்த ஒருமைப்பாடு தோல்விக்கு நாட்டில் செயல்படும் பல மொழிகளிலான கல்வி திட்டமும் ஒரு காரணம் என துணைப்பிரதமர்  நினைவுக்கூர்ந்ததையும் சுட்டிக்காண்பித்த மணிவண்னன் தாய்மொழிகள் பள்ளிகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு தடையாக இருக்கிறது என்பது வேடிக்கையானது என்றார்.

இந்நிலையில்,நாட்டில் மலேசியர்களிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்த பிரதமர் துறையின் கீழ் தனி சிறப்பு செயலகம் அமைத்து அதன் மூலம் மலேசியர்கள் மத்தியில் ஒருமைப்பாடு மேலோங்க வழிகோல வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறையின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இங்கு ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் அதன் கீழ் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்வுகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வழிகோலாமல் அஃது குறிப்பிட்ட நோக்கத்தினை மட்டுமே வரையறுத்திருப்பதாகவும் கூறினார்.

நாட்டில் மலேசியர்கள் மத்தியில் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் மேலோங்காமல் போனமைக்கு ஆளும் அரசாங்கத்தின் நேர்மையும் வெளிப்படையாக அரசியல் தன்மையை அஃது கொண்டிருக்காததே என்றும் துணைப்பிரதமருக்கு சுட்டிக்காட்டுவதாகவும் மணிவண்னன் குறிப்பிட்டார்.

அதேவேலையில்,துணைப்பிரதமருக்கு நாட்டில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மேலோங்குவதற்கு சில ஆலோசனைகளையும் முன் வைப்பதாக மணிவண்னன் கூறினார்.

1.  தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை   மலேசியர்களிடையே ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையிலான செயல்பாடுகளை விவேகமாய் வரையறுத்தல்.அதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வரையறுத்தல்.

2. மலேசியாவில் இருக்கும் பல்லின மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றோடு அதன் தனித்துவத்தை வெளிப்படையாக பாராட்டுதல்.அதைவிடுத்து இனவாத கருத்தினை முன் வைப்பது அர்த்தமற்றது.அஃது தொடரக்கூடாது என்றார்.நாட்டில் மலாய்,சீன மற்றும் இந்தியர்கள் எனும் மூன்று முதன்மை இனங்களோடு சுமார் 27 பிரிவினர் இந்நாட்டில் வாழும் போது தேசிய நிலையிலான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் அவசியம் என்றார்.

3.ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் தேசிய நிலையிலான ஒரே கொள்கையை கொண்ட சித்தாந்ததை உருவாக்குதல்  அதன் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அதேவேளையில் நாட்டு விசுவாசமும் அவர்களிடையே மேலோங்க வைக்க முடியும்.ஆனால்,எந்தவொரு சித்தாந்தமும் இனவாத சிந்தனையை கொண்டிருக்க கூடாது.

4.இனவாத சிந்தனைகளும் செயல்பாடுகளும் மலேசியர்களை பிரித்திடக்கூடாது.குறிப்பாக அரசு மற்றும் தனியார் பாரங்களில் “இனம்” எனும் வார்த்தை அகற்றப்பட வேண்டும் என்றார்.அஃது மலேசியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும்.குடியுரிமை பெற்றவரா அல்லது குடியுரிமை அற்றவரா என்பதை மட்டுமே வரையறுக்க வேண்டும்.

5. தற்போது அமலில் இருக்கும்   தேசிய சேவை பயிற்சி திட்டம் நடப்பில் இருப்பதை போல இல்லாமல் அஃது விவேகமான மற்றும் அதன் உண்மையாக நோக்கத்தையும் இலக்கையும் கொண்டிருக்க வேண்டும்.

6. கல்வியல் நிலையிலும் புதியதொரு அணுகுமுறையும் செயல்பாடுகளும் இருத்தல் வேண்டும்.கல்வியல் நிலையில் மாணவர்கள் மத்தியிலும் அந்த ஒற்றுமையும் ஒருமைப்பாடும் வலுப்பெற வேண்டும் என்ரும் குறிப்பிட்டார்.21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப கல்வியல் திட்டத்திலும் மாபெரும் மாற்றங்கள் அவசியம்.தாய் மொழி கல்வியால் நாட்டில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மேலோங்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

நாட்டில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மலேசியர்களிடையே மேலோங்கவும் அஃது ஆழமான புரிந்துணர்வை மெய்பிக்கவும் நாட்டில் இனவாதம் எனும் மாயை உடைத்தெறியப்பட வேண்டும்.அது உடைப்பட்டால் நாட்டில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிச்சயம் மேலோங்கும் என்றும் மணிவணன்ன் நினைவுறுத்தினார்.

நாம் பல்லின மக்களாய் வாழ்ந்தாலும் நம்மிடையே மலேசியர்கள் எனும் நிலையும் உணர்வும் ஆழப்பதிந்தால்தான் நம்மிடையே ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மேலோங்கும் என்றும் நினைவுறுத்தினார்.

 

 


Pengarang :