MEDIA STATEMENT

மக்கள் மாற்றத்தை கோருகிறார்கள்

அரசியல் கட்சிகள் 14வது  பொதுத் தேர்தலுக்கு போராட்டம் நடத்தும் வேளையில்  இன்னும் மாறாமல் இருப்பது நடுத்தர மற்றும் கீழ்தர வருமானம் பெறும் குடும்பங்களின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதில்.

நாட்டை ஆளும் டத்தோ ஸ்ரீ நஜிப் மற்றும்  அம்னோ பிஎன் அரசாங்கம் அதன் பொறுப்புகள் மற்றும் கடமைகளில் இருந்து  ஓட முடியாது. எதிர்க்கட்சிகளை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை  என்று காரணம் கூறாமல் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

டத்தோ ஸ்ரீ நஜிப்  அவர்தம்  அரசாங்கமும் பி40 ( ரிம3900 கீழ் மாத  வருமானம்) & எம்40 ( ரிம3900- ரிம8300 மாத வருமானம்) என்ற   அறிவிப்பு  மக்களின் மோசமான நிலையில் இருப்பதாக  ஒத்துக் கொண்டு இருக்கிறார்.

பட்ஜெட் 2017-இல் பிரதமர் பி40 மற்றும்  எம்40 வர்க்கத்தின் சுமைகளைக் குறைக்க ரிம10 பில்லியன்  ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், அவை எரிபொருள் மற்றும் பொது போக்குவரத்தும் அடங்கும்.

 

sawah-padi

 

 

 

மேலும் நெல் விவசாயிகள், இரப்பர் சிறுதோட்ட முதலாளிகள் மற்றும் மீனவர்கள் உட்பட  உதவிகள் வழங்கப்பட்டன என்று தெரிவித்தார். ஆனால் எப்போதும் 7 மில்லியன் மக்களுக்கு ரிம6.8 பில்லியன் பிரிம் உதவித் தொகை மட்டுமே பேசுவது  ஆச்சரியமாகஇருக்கிறது.

அதற்கு மேல் நஜிப் புதியதாக “பொது மக்களின் மகிழ்ச்சி” என்ற தாரக மந்திரத்தை உச்சரித்து மகிழ்ச்சியான  வாழ்க்கை தரமே முக்கியம்   வருமானம் மட்டுமே  அல்ல என்றார். ஆயினும்  இந்தக் கொள்கை மலேசியாவில் தற்போது  பயன்படுத்த முடியாது.  ஏனெனில் வருமானம் குறைவாக இருக்கும் நிலை அவர்களுக்கு வாழ்க்கை சுமைகள்  அதிகரிக்கும், ஆக “பொது மக்கள் மகிழ்ச்சியின்மை” என்ற சூழ்நிலை உருவாகும்.

 

 

 

BR1M

 

 

 

 

 

மலேசியாவில் தற்போது  ஏழை மற்றும் பணக்காரர்களிடம் உள்ள  இடைவெளி அதிகரிப்பு, 75% மக்கள் ரிம5000 குறைந்த குடும்ப வருமானம் பெறுகின்றனர். இப்படி  ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலை செய்தால் எப்படி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்?

எங்கள்  ஆய்வின் படி இந்த வர்க்கத்தின் 10,20 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு நினைக்கவே முடியாத சூழ்நிலை உருவாகும். அவர்கள் 1 ஆண்டுக்கு அல்லது 6 மாதம், இன்னும் 3 மாதத்திற்கு மட்டுமே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில்  அவர்களின் வருமானம் செலவை விட குறைவாக உள்ளது.

 

 

 

 

Korea Utara

 

 

 

 

 

 

அண்மையில்  டத்தோ ஸ்ரீ நஜிப்பின் அனைத்துலக  அரங்கில் வெற்றி பெருமிதம் என்னை   ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் உள்நாட்டு மக்கள் நலன்களான  உணவு, சுகாதாரம், நீர், வீட்டுடமை, சாலை மற்றும் கல்வி நிலை மோசமான சூழ்நிலை இருக்கிறது என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன்.

அனைத்துலக  உறவுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் உள்நாட்டு மக்கள் ஜிஎஸ்டியினால் பாதிப்பு, வாழ்வுரிமை போராட்டம், கடன்  அதிகரிப்பு, உயர் கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் விலை உயர்வு, மேலும் பொது போக்குவரத்து கட்டணங்கள்  அதிகரிப்பு போன்றவை  நஜிப்பின் அனைத்துலக அங்கீகாரத்தினால் களைய போகிறதா?

 

ஆகக் கடைசியாக, பாக்காத்தான் ஹாராப்பானின் கொள்கைகள் ஆட்சிக் மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும். அதற்கு முன்  இப்படி பட்ட மாயையை ஏற்படுத்தும் நோக்கிலே தற்போதைய அரசின்  செயல்பாடுகள் அமையும். மேலும் அரசு நிர்வாகம் மற்றும் கிளிப்தோகிராட் ஆட்சி, குழப்பங்கள் நிறைந்த, ஊழல் ,  அதிகார பண மற்றும் பதவி துுஷ்பிரயோகம் தொடர்ந்து நாட்டு மக்களையுும அழிக்கும். ஆகவே நாட்டை காப்பாற்ற மக்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூூட்டணியை ஆட்சசிக் கட்டிலில் ஏற்ற வேண்டும்.

சைட் இப்ராகிம் சைட் நோக்கம்

தேசிய தகவல் பிரிவு தலைவர்

மக்கள் நீதி கட்சி

18 April 2017

@கெஜிஎஸ்


Pengarang :