NATIONALRENCANA PILIHAN

அன்வர் பாஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் நடந்த புயல் காரணமாக ஏற்பட்ட சேதத்திற்கு அனுதாபம் தெரிவித்தார்

ஷா ஆலம், 30 ஏப்ரல்:

கெஅடிலான் கட்சியின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், கெடா பாஸ் வளாகத்தில் நடைபெற்ற பாஸ் கட்சிப் பொது பொதுக்கூட்டத்தில்  ஏற்பட்ட புயல் மழையால், அமைக்கப்பட்ட முதன்மை கூடாரம் சேதத்திற்கு அனுதாபம் தெரிவித்தார்.

அவரின் ஆழ்ந்த அனுதாபத்தை அவர் மகளும் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வர் மூலமாக கூறினார்

” எனக்கு  இப்போது தான் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிடமிருந்து செய்தி வந்துள்ளது, அதில் பாஸ் கட்சியின்  ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்ற போது நடந்த புயல் மழையால் ஏற்பட  இழப்புக்கு அனுதாபம் தெரிவித்தார்,” என்று நூருல் இஸா  கூறினார். பாதிக்கப்பட்ட பாஸ் தோழர்கள் சீக்கிரம் குணமடைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்,” என்று கூறினார்

அதே வேளையில், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அன்வர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மற்றும்  ஆன்மீக தலைவர் ஹாஸிம் ஜாசின் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு அவர்களின் உரையையும் வரவேற்றார்.

WhatsApp Image 2017-04-29 at 9.44.37 PM

 

 

 

 

நேற்றைய சம்பவத்தில் 19 பேர் காயம் அடைந்தனர். பாஸ கட்சியின் 63-வது  ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்ற போது நடந்த புயல் மழையால் முதன்மை கூடாரம் சரிந்தது. மேலும்  அறுவர் சிறிய காயங்களுடன் சம்பவம் நடந்த இடத்திலே சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்

 


Pengarang :